மிரட்டுதே மாடி வீட்டு சிவப்பு விளக்கு பொண்ணு.. பயங்கர ஷாக் !

0

கன்னியாகுமரி நாகர்கோவிலில் நடந்துள்ள ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு, ஒட்டு மொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியில் உள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

மிரட்டுதே மாடி வீட்டு சிவப்பு விளக்கு பொண்ணு.. பயங்கர ஷாக் !
விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்ற முழக்கத்தோடு அறிஞர் அண்ணாவால் கடந்த 1968-ல் நம்முடைய தமிழகத்தில் அறிமுகமானது தான், லாட்டரிச் சீட்டு திட்டம். 

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்படுத்தப் பட்டது இந்த லாட்டரிச் சீட்டு திட்டம். ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை தந்தார்கள். 

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தால் ஏற்படும் விளைவுகள் !

ஆனால், லாட்டரிச் சீட்டுக்கு அடிமை யானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த லாட்டரியால் அன்றாட வருமானத்தையும் ஏழை மக்கள் இழக்கும்படி நேர்ந்தது. 

மேலும், தங்களின் வாழ்நாள் சேமிப்பையும் இழக்க நேர்ந்தது. அதை விட முக்கியமாக, லாட்டரி இழப்பானது, பல உயிர்களையும் தற்கொலையாய் மாறி காவு வாங்கியது.

எந்த மக்கள் இந்த திட்டத்தை வரவேற்றார்களோ, அதே மக்கள், கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்தனர். கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா லாட்டரிச் சீட்டுக்கு அதிரடி தடையை கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் தமிழகத்தில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இப்போது மறுபடியும் இந்த லாட்டரியை தமிழகத்தில் கொண்டு வரலாமா? என்ற பேச்சு அடிக்கடி எழுந்தவாறே உள்ளது. 

அது மட்டுமல்ல, மின்துறையில் நிறைய கடன் இருப்பதால், கடன் சுமையை குறைக்க மின் லாட்டரியை கொண்டு வரலாம் என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரமும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார்.

வருவாயை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கும் இந்த சூழலில், அதன் ஒருபகுதியாக மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதிக்கலாமா? என்று அடிக்கடி விவாதமும் வெடித்து கிளம்புகிறது. 

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்ய தடை வலுவாக இருந்தாலும், பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை ஜரூராகவே நடக்கிறது.

கேரளாவில் லாட்டரி விற்பனை என்பதால், அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும், ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். 

அதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஆன்லைன் லாட்டரி விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறதாம். இதற்காக கேரளாவில் இருந்து கொண்டு வந்த லாட்டரிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். 

இது குறித்து ஒரு ரகசிய தகவல் தற்போது போலீசாருக்கு வந்துள்ளது. 

நாகர்கோவிலில் மீனாட்சிபுரம் பகுதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில், ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த மீனாட்சிபுரம் என்பது, நகைக்கடைகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ஒரு மாடி வீட்டில் தான், லாட்டரி விற்பனை நடப்பதாக சொல்லவும், கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீஸார், மீனாட்சிபுரம் பகுதியில் அதிரடியாக களமிறங்கினார்கள். 

அந்த பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். அப்போது தான், ஒரு கட்டிடத்தின் மாடியில், லாட்டரி விற்பதை கண்டுபிடித்தனர்.

அந்த மாடிக்கு சென்று பார்த்தால், ரகசிய ரூம்கள் நிறைய இருந்திருக்கின்றன. அந்த ரகசிய அறைகளில் மொத்தம் 6 இளம்பெண்கள் இருந்திருக்கிறார்கள். 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கேரள மாநில லாட்டரி சீட்டுகளை, இந்த பெண்களை வைத்து விற்க செய்துள்ளார்கள். இதற்காகவே, ஸ்பெஷல் கவுண்ட்டர்கள் அந்த ரூமில் அமைக்கப் பட்டிருக்கிறாம்.

அந்த கட்டிடத்தை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்பட்டு, இதற்காகவே தனி ஊழியரையும் பணியில் அமர்த்தி யிருக்கிறார்கள். 

வாசலில் சிவப்பு, பச்சை விளக்குகள் அலாரம் பக்கத்து பக்கத்திலேயே சுவற்றில் பொருத்தப் பட்டிருக்கின்றன. 

மழையின் இரகசியம் மற்றும் மழை எவ்வாறு உருவாகின்றது?

இதில், பச்சை கலரில் விளக்கு எரிந்தால், கஸ்டமர்கள் உள்ளே வரலாம் என்று அர்த்தமாம். சிவப்பு விளக்கு எரிந்தால், ஏதோ பிரச்சினை, உள்ளே வாடிக்கையாளர்கள் வரக்கூடாது என்று அர்த்தமாம்.

இப்படி மிகப்பெரிய டீமுடன், இந்த லாட்டரி விற்பனை செய்து வருவதை பார்த்து போலீசாரே மிரண்டு போய் விட்டார்கள். 

அங்கிருந்த அறைகளில் சோதனை நடத்தியதில், 56 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை: மேலும், போலீஸார் சுற்றி வளைத்து பிடித்ததில் 6 பெண்களுடன் சேர்த்து ஒரு இளைஞரும் சிக்கினார். மொத்த பேரையும் கோட்டார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

மாடியில் தனி ரூம் + சிவப்பு விளக்கு  +  அலாரம் + கேமரா இதெல்லாம் கேள்விப் பட்டால், பழைய சினிமாவில் வரும் திரில்லர் காட்சிகளை போலவே இருக்கிறது. 

ஆனால், இவர்களுக் கெல்லாம் பாஸ் யார் என்று தெரியவில்லை. மூளையாக செயல்படும் அந்த நபரையும் போலீசார் விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது. 

இந்த செய்தி மிகவும் பரபரப்பை தந்துள்ள நிலையில், நம்ம மீனாட்சிபுரத்திலா இப்படி யெல்லாம் நடக்கிறது? என்று நாகர்கோவில் மக்களே அதிர்ந்து போய் கிடக்கிறார்களாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings