மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிரியாவிடை நிகழ்வின் போது அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலக பியூனின் காலில் விழுந்து மரியாதை செய்த நிகழ்வு வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
சமீபத்தில் பல அரசு ஊழியர்கள் ஜார்கண்ட் அரசாங்கத்தால் பணியிடை மாற்றம் செய்யபட்டப் போது ஆஞ்சநேயுலு டோடேவும் தும்கா மாவட்டதிற்கு பணியிடை மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்.
அதனால் அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சியின் போது ஆஞ்சநேயுலு அவரது அலுவலக பியூனான நந்த்லால் என்பவரின் காலில் விழுந்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி யிருக்கிறார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
இது குறித்து பேசிய ஆஞ்சநேயுலு, எனது தந்தையும் ஒரு பியூனாக பணிபுரிந்தவர் தான். நான் அலுவலகத்திற்கு வந்து பதவியேற்ற நாளில் இருந்து தற்போது வரை எனக்கு நிறைய சேவைகளை நந்தலால் செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆஞ்சநேயுலுவின் இந்த செயலுக்கு பலரும் சமூக வலை தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மரியாதை தெரிந்த அருமையான அதிகாரி.....
ReplyDelete