புதிய ரூபாய் நோட்டுகளில் பல முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது, இதனால் போலி ரூபாய் நோட்டுகள் உருவாக்குவது என்பது கடினமான ஒன்றாக இருந்தாலும்
இந்த நிலையில் இந்தியாவிலும் சூப்பர் நோட் எனப்படும் அசலுக்கும், போலிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கும் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதா என்ற அச்சம் அதிகரித்தது.
ஒரு வேளை உங்கள் கையில் கள்ள நோட்டு பெற்றால் என்ன செய்ய வேண்டும்..?
ஏடிஎம்மில் கள்ள நோட்டைப் பெற்றால், அந்த நோட்டின் முன் மற்றும் பின்புறம் இரண்டையும் சிசிடிவி கேமராவில் காட்டி, ஏடிஎம்மில் உள்ள பாதுகாவலரிடம் தெரிவிக்கவும்.
மறக்காமல் உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனையின் ரசீதை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்துக் கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த படிவத்தின் அடிப்படையில் தான் போலி நோட்டுக்குப் பதிலாக அசல் நோட்டைக் பெற முடியும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஏடிஎம்மில் இருந்து போலி நோட்டுகள் வந்தால் வங்கிகள் வாடிக்கையாளருக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
இதுவே தனிப்பட்ட பரிவர்த்தனையின் போது நீங்கள் போலி ரூபாய் நோட்டைப் பெற்றால், நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் எனில் சம்பந்தப் பட்டவர் கண்முன்னே இருந்தால் உடனே அவரிடம் மாற்றிக் கொள்ளுங்கள்.
உறுதியான ஆதாரம் இல்லாமல் இதில் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், நீங்கள் பல போலி நோட்டுகளைப் பெற்றால், அதை மறைக்கவோ
அல்லது மறைக்கவோ முயற்சிப்பதை விட, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பது நல்லது.
மேலும் IPC பிரிவு 489 C-ன் கீழ் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தண்டனைக் குரியது. குற்றம் செய்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Thanks for Your Comments