கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச் சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவருக்கு சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. அந்த ஓட்டலில் ஊழியர்களாக பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த சிபில் (19), பர்ஹானா (18), ஆஷிக் (23) வேலை பார்த்தனர்.
ஓட்டல் அதிபர் சித்திக் கொலை வழக்கில் இந்த மூன்று பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட மூவரும், சித்திக்கிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிக்க சதி செய்து அவரை ஹனி டிராப்பில் சிக்க வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட சிபில், பர்ஹானா, ஆஷிக் ஆகிய மூவரும் எம்.டி.எம்.ஏ என்ற கொடிய போதைப் பொருளுக்கு அடிமையாகி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக பணிபுரிந்து உள்ளனர். அதனால் சித்திக்குடன் பர்ஹானாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் போனில் பேசுவது வழக்கம்.
அது பின்னர் கள்ளத் தொடர்பாக மாறி உள்ளது. குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஐந்து லட்ச ரூபாயை கேட்டு சித்திக்கை மிரட்டியுள்ளனர்.
ஆனால் அந்த பணத்தை கொடுக்க சித்திக் தயாராக இருந்தார். இருப்பினும், அன்றிரவு பர்ஹானா தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க வேண்டும் என்று சித்திக் நிபந்தனை விதித்து உள்ளார்.
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
தான் ஹனிட்ராப்பில் விழுந்ததை உணர்ந்த சித்திக் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து, சிபிலுக்கும், ஆஷிக்கும் சித்திக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிந்தது.
Thanks for Your Comments