மாலை வெயில் உடலுக்கு நல்லதா?

0

காலை வெயிலைச் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். மாலை வெய்யில் கூட மோசமானது என்றில்லை. நீங்கள் கவனிக்க வேண்டியது சூரிய ஒளி உங்களில் படும் முன்னர் எவ்வளவு நேரம் வளிமண்டலத்தில் பயணம் செய்கிறுது என்பதனைத் தான். 

மாலை வெயில் உடலுக்கு நல்லதா?
அன்றியும் ஒரு சரிவாக வந்து விழும் சூரிய ஒளியில் UV A UV B போன்ற கதிர்களின் தாக்கம் குறைவு. 

அப்படிப் பார்க்கப் போனால் காலை வெயிலும் மாலை வெயிலும் ஒன்று தான். உச்சிப் பொழுதில் நேரடியாக வந்து விழும் சூரியக் கதிர்கள் தீங்கானவை. 

இந்தக் கதிர்களின் தாக்கம் தான் மெலனோமா என்னும் தோற் புற்றுநோய்க்குக் காரணம். எதற்கும் நண்பகலில் ஒரு போதும் 10 நிமிடத்துக்கு மேல் சூரிய வெயிலைத் தோலிற்பட விடாதீர்கள்.

பெண்கள் புறா வளர்க்கக் கூடாது? ஏன் தெரியுமா?

வெயிலின் பலன் வைட்டமின் டி3 மட்டும் தான் என்று எண்ணி விடாதீர்கள். தினசரி காலையோ மாலையோ ஒரே நேரத்தில் உடம்பில் படும் வெயில் உங்கள் circadian rhythm ஐ அதாவது உடற்கடிகாரத்தை கட்டுப்படுத்துகிறது. 

நேரத்தோடு நித்திரை கொள்ள, நேரத்தோடு விழித்துக் கொள்ள, தூங்கி வழியாமல் வேலை செய்ய, உணவு உட்கொள்ளும் நேரங்களைக் கட்டுப்படுத்த என்று இவை எல்லாவற்றுக்குமே circadian rhythm இன் கட்டுப்பாடு தேவை!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings