இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பணம் பரிமாற்ற முறைகள் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனால் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் பண புழக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது கண்முன்னே தெரிந்தாலும், ரூபாய் நோட்டுகல் இன்னும் அதிகளவில் புழக்கத்தில் தான் உள்ளன.
கோதுமை அடை செய்வது எப்படி?
பல இடங்களில் இன்னும் பணம் தான் கிங் ஆக உள்ளது, அதிலும் குறிப்பாக பெரும் தொகையில் பண பரிமாற்றம் செய்யும் போது பணம் தான் 99 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி ரூபாய் நோட்டுகளை தினமும் பயன்படுத்தி வரும் நாம், இந்த ரூபாய் நோட்டுகளை எதனால் செய்யப்படுகிறது என்பது தெரியுமா..? பேப்பர் தான் என நீங்கள் சொன்னால் கட்டாயம் இல்லை.
இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் செய்யப் பட்டவை என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம், ஆனால் அது உண்மையல்ல.
பேப்பரால் செய்யப் பட்டால் கட்டாயம் குறுகிய காலக்கட்டத்திலேயே எளிதாக கிழியும், இதேபோல் தண்ணீரில் போட்டால் ரூபாய் நோட்டு எளிதில் கிழிந்து விடும்.
தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. தேய்மானம் மற்றும் கிழிவும் தன்மை காரணமாக, இவை பெரும்பாலும் அழுக்காகி விடுகின்றன அல்லது கிழிந்து விடுகின்றன.
இதனால் அனைவரும் ரூபாய் நோட்டுகளை காகிதத்தால் தான் உருவாக்க பயன்படுகிறது என்று நம்மை வைக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் படி, இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட காகிதம் பயன் படுத்தப்படுவது அல்ல, 100% பருத்தி பயன்படுத்தப் படுகிறது.
காய்கறி கோதுமை போண்டா செய்வது எப்படி?
காகிதத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நோட்டுகளைக் காட்டிலும் பருத்தியால் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை அதிக காலம் நீடித்து பயன்படுத்த முடியும்.
அன்றாடப் பயன்பாட்டிலிருந்து சேதமடைவதை காக்கிறது. பருத்தி மூலம் ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் போது விரைவான தேய்மானத்தை
தடுப்பது மட்டும் அல்லாமல் எடை குறைந்த தாக்குகிறது மற்றும் போலியாக தயாரிப்பதில் அதிகபடியான தடைகளை உருவாக்கிறது.
வாட்டர்மார்க் மற்றும் எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க், மைக்ரோ எழுத்துகள் மற்றும் மறைந்திருக்கும் காந்தி படம் போன்றவற்றை எளிதாக
இந்த பருத்தியால் செய்யப்பட்ட தாளில்களில் கொண்டு வர முடிகிறது. காகிதத்தில் இத்தகைய பாதுகாப்பு தன்மையை கொண்டு வருவது கடினம்.
நாக்கில் எச்சில் ஊறும் பூண்டு குழம்பு செய்வது எப்படி?
இந்தியா மட்டும் அல்லாமல் அமெகிக்கா போன்ற பல நாடுகள் இத்தகைய பருத்தியால் செய்யப்பட்ட இழைகளில் தான் நாணயங்களை அச்சிடுகிறது.
அமெரிக்க அரசு அமெரிக்க டாலரை 25 சதவீத லெனின், 75 சதவீத காட்டன் கலப்பு கொண்ட இழைகளில் அச்சிடப்படுகிறது.
Thanks for Your Comments