அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிர்வாண பெண் வாகனங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் பரபரப்பு மிக்க நெடுஞ்சாலையில் காரில் வந்த இளம் பெண் அங்கிருந்த டோல் பிளாசா அருகே
வாகனத்தை நிறுத்தி விட்டு தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக நெடுஞ்சாலையில் துப்பாக்கியுடன் நடந்து வந்திருக்கிறார்.
திடீரென அவர் கையில் இருந்தது துப்பாக்கியை வைத்து அங்கு சென்ற வாகனங்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக நெடுஞ்சாலை பாதுகாப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
எனினும் அவரை துரத்திச் சென்று பிடித்த காவல் துறையினர் மனநிலை பரிசோதனை களுக்காக மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
மனநல பரிசோதனை அறிக்கை வந்த பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments