வேலை தேடும் நபர்களை குறி வைத்து அரங்கேரும் புது மோசடி. வெளிநாட்டில் இருந்து வேலை கொடுப்பதாக கூறி ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லி ஆன்லைன் மூலம் ஆப்பு வைக்கின்றது தில்லாலங்கடி மோசடி கும்பல்.
இன்றைக்கு பணத்தை திருடும் மோசடி கும்பல் பலரும் ஆன்லைனில் பலருக்கும் ஆசையை விதைத்து ஏமாந்த நேரத்தில் பணத்தை அறுவடை செய்து விடுகின்றன.
ஆன்லைன் லோன் ஆப்கள் ஒரு பக்கம் ஏற்றி வருகிறது என்றால் இப்பொது புதுவிதமாக வேலை தேடுபவர்களை குறி வைத்துள்ளது மற்றொரு கும்பல்.
குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைப்பவர்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் ஆன்லைன் மூலம் வலை விரிக்கிறது.
இந்த மோசடி கும்பல் பற்றி சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணைய தளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள்.
எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால் வீட்டில் இருந்த படியே தினமும் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த லிங்கை தொட்டால் telegram செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப் படுவீர்கள்.
அருமையான கிரீமி தக்காளி சூப் செய்வது எப்படி?
முன் பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள்.
அதன் பிறகு ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முன்பணம் கொடுத்த பிறகு உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள்.
ஆன்லைனில் வேலை தேடும் நபர்கள் கவனமாக இருங்கள். நம்பகமான நிறுவனமாக இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றி தகவல்களை உள்ளிடுங்கள்.
இடுப்பு தசைகளை பலப்படுத்தும் வஜ்ராசனம் ! #Vajrasana
எந்த நிறுவனமும் இன்டர்வியூவின் போதே உங்களின் வங்கி கணக்கு எண், ஐஎப்எசி உள்ளிட்ட விபரங்களை கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
Thanks for Your Comments