வீடியோவுக்காக நாய்கள் மூலம் பாம்பு வேட்டை... சிக்கிய இளைஞர் !

0

சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக விதவிதமாக வீடியோக்களை எடுத்து வருகிறார்கள் இன்றைய தலைமுறையினர். 

வீடியோவுக்காக நாய்கள் மூலம் பாம்பு வேட்டை... சிக்கிய இளைஞர் !
அந்த வகையில் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட சிப்பிப்பாறை நாய்கள் மூலம் பாம்புகளை வேட்டையாடி வீடியோ வெளியிடப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, பிச்சன் கோட்டகம், மூலக்கரை கிராமத்தில் வசிக்கும் அன்பழகன் என்பவரது மகன் ஆனந்த். 27 வயதான இவர் சிப்பி பாறை நாய்கள் வளர்த்துக் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். 

இந்நிலையில் சிப்பி பாறை நாய்களை வைத்து மூக்கரைக் கிராம வயல் வெளியில் சாரை பாம்பு உள்ளிட்ட மற்ற விஷ பாம்புகளை வேட்டையாடி அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். 

அதனைத் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது குறித்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. 

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரிக்காப்பாளர் யோகேஷ்குமார் ஆகியோரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் வனச்சரக அலுவலர் 

அயூப்கான் தலைமையில் வனவர் பெரியசாமி, சதீஷ்குமார், வனக்காவலர் நாகூரான் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணியளவில் 

மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை இந்திய வன உயரின பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் பேசினோம். 

பாம்புகளை வேட்டையாடுவது இந்திய வன உயிரின சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். தான் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய்கள் மூலம் வேட்டையாடி யுள்ளார். 

இரத்த தானம் செய்யும் முன் தெரிந்துக் கொள்ளுங்கள் !

அத்துடன் அதனை வீடியோவாக பதிவு செய்து ரசித்ததோடு, அதனை சமூக வலை தளங்களிலும் பதிவு செய்துள்ளார். 

அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திக் காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings