என்றாவது நிச்சயம் பயன்படும் சில தந்திரங்கள் !

0

நிறைய கடைகளில் சில்லரை வேண்டும்னு கேட்டால் தர மாட்டாங்க. ஏதாவது வாங்கினால் மட்டும் தான் சில்லரை தருவாங்க. 

என்றாவது நிச்சயம் பயன்படும் சில தந்திரங்கள் !
ஆனால் உங்களுக்கு சில்லரை மட்டும் தான் வேண்டும் எதுவும் வாங்க விருப்பம் இல்லைன்னா, பெட்ரோல் பங்கில் போய் சில்லரை கேளுங்கள். இரண்டாயிரம் ரூபாய்க்கு கூட அங்கு சில்லரை தருவாங்க.

நிறைய பேர் காலையில் சாப்பிட மாட்டோம். அப்படி சாப்பிடாதப்ப மயக்கம் வர மாதிரி இருக்கும். நீங்களாம் பர்சில் சாக்லேட் வைச்சிகோங்க. அதில் சக்கரை இருப்பதால் உடலுக்கு இன்ஸ்டென்ட் எனர்ஜி தரும்.

உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா செய்வது எப்படி?

பஸ்ஸில் போகும் போது தூங்கிட்டீங்கன்னா, எந்த ஊர் வந்துருக்கோம்னு தெரிஞ்சிக்க அங்கு இருக்கும் கடைகளின் போர்டை பாருங்கள். அதில் ஊரின் பெயர் இருக்கும்.

பஸ்ஸில் பெண்கள் தனியாக இரவில் பயணம் செய்தால் டிரைவர் அல்லது கண்டெக்டர் சீட்டிற்கு அருகில் அமருங்கள். அங்க வந்து யாரும் உங்களுக்கு தொல்லை தர மாட்டாங்க.

பஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் அதை பஸ்ஸை விட்டு இறங்கும் வரை வைத்திருங்கள். ஊர் தான் வந்திட்டேன்னு தூக்கி போட்டு விட கூடாது. கடைசி நேரத்தில் கூட செக்கிங்க்கு வருவாங்க.

பெண்கள் எல்லோரும் பர்ஸில் ஒரு பின்னோ அல்லது பிளேடோ வைத்திருப்பது அவசியம். அதனால் பெரிய உதவி இல்லைன்னாலும் ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும்.

அவசரமாக டாய்லெட் பயன்படுத்தனும் ஆனால் அப்படி எந்த இடமும் இல்லைன்னா ஏதாவது ஹோட்டல்க்கு போங்க. அங்க கண்டிப்பாக டாய்லெட் இருக்கும்.

வெளி இடங்களில் யாரிடமும் பேச விருப்பம் இல்லைன்னா, ஹெட்செட் போட்டுக்கோங்க. பாட்டு கேட்க வேண்டும்னு அவசியமில்லை. யாரும் உங்ககிட்ட வந்து பேச முயற்சிக்க மாட்டாங்க.

சுவையான இஞ்சி பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

பணம் எடுக்க பேங்குக்கு போன உடனேயே டோக்கனை எடுத்துடுங்க. அப்பறம் பொறுமையாக எவ்வளவுன்னு பார்மை பில் பண்ணுங்க. சீக்கிரமாக பணத்தை வாங்கிட்டு வந்துடலாம்.

என்றாவது நிச்சயம் பயன்படும் சில தந்திரங்கள் !
ஏ.டி.எம் பின் வைப்பதற்க்கு நிறைய பேர் பிறந்தநாள் போன்ற எளிமையாக நியாபகம் வைச்சிக்குற மாதிரி எண்களை வைப்பார்கள். 

இன்னும் எளிமையாக்க பிரபலமான நாட்களை வைத்தால் குழப்பமில்லாமல் மனதில் நிற்க்கும். உதாரணத்திற்கு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி 0210 போன்று வைத்து எளிமையாக நினைவில் கொள்ளலாம்.

போன் கேஸுக்குள் ஒரு நூறு ரூபாய் பணம் வைத்திருப்பது நல்லது.

உண்டியலில் பணம் சேமிப்பது.

எந்த ஊருக்கு புதிதாக போனாலும் அந்த ஊரின் லேன்ட் மார்க் என்னன்னு தெரிஞ்சிக்கணும்.

சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி?

நீங்க எங்க போனாலுமே யாராவது ஒருவரிடம் சொல்லிட்டு போகணும். யாருக்குமே நீங்க எங்க போயிருக்கீங்கன்னு தெரியலைன்னா, தொலைஞ்சி போனால் கூட கண்டுப்பிடிக்க முடியாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings