குதிரையின் லாடத்தை வீட்டு வாசலில் கட்டுவது எதனால்?

0

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டு முன் கதவில் குதிரை லாடத்தை U வடிவில் மாட்டி வைப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தி கண் திருஷ்டியையும் போக்குகிறது.

குதிரையின் லாடத்தை வீட்டு வாசலில் கட்டுவது எதனால்?
ஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்களுக்கு நாம் நிறைய பெயரை வைத்திருக்கின்றோம். 

கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, மருந்து வைப்பது இப்படி எதிர்மறை ஆற்றலுக்கு பல உருவங்களை கொடுக்கின்றோம். 

ஹெல்மெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே !

கண்ணுக்குத் தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப் பட்டுள்ளது. 

அதில் ஒரு சுலபமான பரிகாரம் தான் நிலை வாசலில் குதிரை லாடத்தை வைப்பது என்பது. பல நூற்றாண்டுகளை கடந்தும் செய்யப்படும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றாக சொல்லப் படுகிறது. 

இது பணத் தட்டுப்பாட்டை நீக்குகிறது என்ற நம்பிக்கையும் கூட. குதிரை லாடத்தை நிலை வாசல் படியில் முறைப்படி இப்படி வைத்தால், வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழையாது, 

உங்கள் வீடு எப்போதுமே பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இரும்பு வைத்துக் கொண்டால் கெட்ட சக்தி நம்மை அண்டாது என்று சொல்லுவார்கள் அல்லவா. 

பெண்கள் வீட்டில் தீட்டான சமயத்தில் கூட இரும்பை பக்கத்தில் வைப்பார்கள். இதைப்போல் அசைவம் சமைத்து வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும் போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

பேய் பிசாசு பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கூட ஒரு சிறிய ஆணியை அந்த அசைவ சாப்பாடு உடன் வைத்து அனுப்புவார்கள். சாதாரண இரும்பை விட பல மடங்கு சக்தி கொண்டது தான். 

இந்த இரும்பில் செய்யப்பட்ட, குதிரை காலில் இருக்கக்கூடிய லாடம். பெரும்பாலும் இந்த குதிரை லாடம் நிறைய பேருக்கு கிடைக்கலாம். ஆனால் அந்த குதிரைலாடம் தோஷம் இல்லாததாக இருக்க வேண்டும். 

நோய் வாய்ப்பட்டு இறந்த குதிரைகள், ஏதேனும் விபத்தின் மூலம் எதிர்பாராமல் இறந்த குதிரைகளில் இருந்து எடுக்கக் கூடிய குதிரை லாடம் தோஷம் நிறைந்ததாக இருக்கும். 

தோஷம் நிறைந்த லாடத்தினை நாம் பயன்படுத்தும் போது, அதிலிருந்து நமக்கு பலன் முழுமையாக கிடைக்காது என்றும் சொல்லப் பட்டுள்ளது.

உங்களுக்கு எந்த முறையில் குதிரை லாடம் கிடைத்தாலும் சரி, அந்த குதிரை லாடத்லில் இருக்கும் தோஷத்தை முதலில் நீக்கிவிட வேண்டும். 

ஒருத்திக்கு ஒருத்தி என்றிலாமல்... யாரும் யாருடனும்.. இப்படி ஒரு உலகம் !

உங்களுக்கு கிடைத்த லாடத்தினை முதலில் பசு கோமியத்தில் நன்றாக அபிஷேகம் செய்து, ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சுத்தமான பசும்பாலில் அந்த குதிரை லாடத்தினை அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். 

அதன் பின்பு மஞ்சள் தண்ணீரில் கழுவி, அதன் பின்பு அந்த லாடத்தினை நம்முடைய நிலை வாசப்படியில் U வடிவத்தில், குதிரைலாடம் மேலே பார்த்தவாறு மாற்றி வைத்தோமே. 

ஆனால் நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஊடுருவுவதை தவிர்க்க முடியும். ஷீரடி அருகில் உள்ள சனி சிங்கணாப்பூர் என்ற ஊரில் உள்ள சனி பகவானுக்கு பூஜை செய்து குதிரை லாடம் கொண்டு வருபவர்கள் பலர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings