டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஊழியர் விக்னேஷுக்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
ஸ்விக்கி, சொமேட்டோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளங்கள் பெருகி விட்ட பிறகு ஏராளமான இளைஞர்கள், டெலிவரி பாய் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் ஏராளமானோர், நகரங்களில் இருந்தபடி தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடிக்கொண்டே, ஃபுட் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பலரும், தங்கள் செலவுக்காக இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஆப்பில் டெலிவரி பாயாக உழைத்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ்.
இவர் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இரவும், பகலும் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சொமேட்டோவில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளது.
அதோடு, சொமேட்டோ ஊழியராகப் பணியாற்றிக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, ஏராளமான நெட்டிசன்கள் விக்னேஷுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சொமேட்டோவில் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்தவர், இனி இந்த அரசுப் பணி மூலம் ஆர்டர்களில் கையெழுத்து போடப்போகிறார் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங் களுக்கான தேர்வுகளை நடத்துகிறது.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு விஏஓ, வரி வசூலிப்பாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
Thanks for Your Comments