நம்மைச் சுற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர், டிவி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றில்,
இவர்கள் செயற்கை நுண்ணறிவுக்கு தான் கட்டளை யிட்டுக் கொண்டிருக்கிறார்கள், இனியா. அதுவும் நம் கட்டளைக்கு ஏற்ப வேலைகளைச் செய்கிறது.
ஆணும் பெண்ணும் - வித்தியாசங்கள் உண்டு !
அமேசானிலோ நெட்ஃ ப்ளிக்ஸிலோ நீங்கள் எந்த மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள், தேடுகிறீர்கள் என்பதை எல்லாம் பகுத்து, நீங்கள் இந்தத் திரைப் படங்களைப் பாருங்கள் என்று அதுவே ஒரு பட்டியலைப் பரிந்துரைக்கிறது!
பேஸ்புக்கில் வரும் விளம்பரங்களில் ஒரு பொம்மையையோ புத்தகமோ உடையையோ க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்று நினைத்து அவை தொடர்பான விளம்பரங்களாகவே உங்களுக்குக் காட்டும்.
போனில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் அது பகுத்துப் பார்க்கிறது. உங்கள் நண்பனுக்கு ஒரு புத்தகத்தை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்.
செயற்கை நுண்ணறிவு வரையும் படங்கள் இப்போதே பயன்பாட்டுக்கு வந்து விட்டன. அடுத்து கட்டுரை, செய்தி, புத்தகம் எல்லாம் எழுத ஆரம்பித்து விடும் என்கிறார்கள்.
நீங்கள் டிங்குவிடம் கேட்கும் கேள்விகளுக்குக் கூட செயற்கை நுண்ணறிவே பதில் சொல்லவும் கூடும். கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த போது, மனிதர்கள் பயந்தது போல் இப்போது செயற்கை நுண்ணறிவைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள்.
இதய இயக்கம் நின்றவருக்கு முதலுதவி ! #CPR
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைக் கையாண்டது போல, செயற்கை நுண்ணறிவையும் மனிதர்கள் வெற்றிகரமாகக் கையாள்வார்கள்.
Thanks for Your Comments