உண்ணி பூச்சி கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

0

உண்ணி என்பது ஒரு சிறிய வகை பூச்சி. இந்த பூச்சி மனித சருமத்தில் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை உறிய ஆரம்பித்து விடும். இவை அராக்னட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை. 

உண்ணி பூச்சி கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
பூச்சிகள், சிலந்திகள் மற்றும் தேள் போலவே இவற்றிலும் சில அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த உண்ணிகள் பொதுவாக நாய்களில் காணப்படும். 

இந்த உண்ணிகள் கடித்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லா விட்டாலும் மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம். 

ஆபத்தை விளைவிக்கும் 

உண்ணிகள் மரத்தில் இருக்கும் உண்ணிகள், மான் உண்ணிகள் போன்றவை தீவிர நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை நம் உடம்பினுள் செலுத்தி மேசமான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks

தாக்கும் நோய்கள் 

நீங்கள் இந்த உண்ணி கடித்தலுக்கு சரியான சிகச்சை செய்யா விட்டால் லைம் நோய், ராக்கி மவுண்டன் ஸ்பாட் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். 

ஏனெனில் இவை நோய்களை எடுத்துட்டு வரும் பூச்சிகள். அதிலும் மான் உண்ணிகள் கடித்தால் கடித்த இடமே தெரியாது. சிறுதளவு பென்சில் புள்ளி போன்று தான் தெரியும். 

கண்டறிவதும் சிரமமாக இருக்கும். ஆனால் மற்ற உண்ணிகளில் கடித்தல் நன்றாக சிவந்து போய் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். குழந்தைகளை கடித்தல் இந்த உண்ணிகள் பொதுவாக குழந்தைகளை கடிக்க வாய்ப்புள்ளது. 

ஏனெனில் அவர்கள் தான் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது, செடிக்குள், மரத்தின் அருகில் செல்வது போன்று இருப்பார்கள். 

குழந்தைகளை கடித்தால் அவர்களால் இதை தாங்க முடியாது. மேலும் அவர்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக அதற்கு உடனே சிகிச்சை மோற்கொள்வது நல்லது. 

கடித்த இடத்தை அடையாளம் காண 

உண்ணி பூச்சி கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

உண்ணிகள் கடித்த உடன் அதை உடனேயே கண்டறிந்து விட்டால் மருத்துவ உதவி எளிதாக இருக்கும். இதனால் நோய்கள் தாக்குவதை தவிர்க்க இயலும். 

உண்ணியின் சுழற்சி 

முதலில் உண்ணியின் தோற்றத்தை பாருங்கள். ஏனெனில் நிறைய வகை உண்ணிகள் இருக்கின்றன. அதன் வாழ்க்கை சுழற்சி அதைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது. 

இந்த உண்ணிகள் வளர நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வாக்கள், நிம்ப் மற்றும் இறுதியில் உண்ணிகளாக மாறும். இதன் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் மேற்புற தோலை மாற்றிக் கொண்ளே இருக்கும். 

கிட்டத்தட்ட டஜன் கணக்கான உண்ணிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோன்றுவது தான் அதிசயம். 

(getCard) #type=(post) #title=(You might Like)

கண்டறிவது கடினம் 

உண்ணி பூச்சி கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

எந்த உண்ணிகள் நம்மளை கடித்துள்ளது என்பதை கண்டறிவது கடினம் தான். ஏனெனில் அது மெதுவாக வலிக்காமல் நம் தோலை உள் துளைத்து செல்லும். அப்படியே இரத்தத்தை உறிஞ்சி சாப்பிட ஆரம்பித்து விடும். 

அதற்குள் கண்டறிந்து விட்டால் நல்லது. அதன் தலை நம் தோலுனுள் துளைத்திருக்கும். அதைச் சுற்றிய தோல் பகுதிகள் சிவந்து போய் எரிச்சல் ஊட்ட ஆரம்பித்து விடும். 

நீங்கள் இதைக் கண்டு கொள்ளாமல் நீண்ட காலம் உணவளித்து வந்தால் கடிபட்ட இடம் பெரிதாக தென்படும். மற்ற பூச்சிக்கடி போன்று இந்த உண்ணிகள் கடி வீங்கி திரவம் வைக்காது. 

வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

உண்ணி பெரும்பாலும் உச்சந்தலையில், இடுப்பு, கால்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் கடிக்கும். மற்ற பூச்சிகள் ஒரு முறை கடித்தால் உண்ணிகள் பல முறை கடிக்கும். 

பெரிய அளவிலான சரும வடுக்கள், சிவந்து போதல் இந்த உண்ணிகள் கடித்திருப்பதன் அறிகுறிகளாகும். 

உண்ணிகளால் பரவும் நோய்கள் 

இவை குழந்தைகளை தாக்கி நோய்களை பரப்புகிறது. 

ராக்கி மவுண்டன் ஸ்பாட் காய்ச்சல். 

துலரேமியா. 

எர்லிச்சியோசிஸ்.  

கொலராடோ டிக் காய்ச்சல். லைம் நோய். 

செளதர்ன் டிக் அசோசியேட்டட் ராஷ் நோய் (STARI).

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings