பாம்புகள் இல்லாத நாடு மற்றும் அதிக பாம்புகளை கொண்ட நாடு எது?

0

பாம்புகளைப் பிடிக்காத பயணிகள் அயர்லாந்துக்கு பயமின்றி பயணிக்கலாம். கடவுளின் படைப்பில் இதை ஓர் அதிசயமாகவே எடுத்துக் கொள்ளலாம். பாம்புகள் இல்லாத நாடு மற்றும் அதிக பாம்புகளை கொண்ட நாடு எது?

இந்த நாட்டை விட, இன்னும் சில உலக நாடுகளில் பாம்புகளே கிடையாது என்பது ஆச்சரியத்தில் ஆச்சரியம். நியூசிலாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அன்டார்க்டிக்கா இங்கும் பாம்புகள் கிடையாது.

அதே சமயம் எந்த நாட்டில் பாம்புகள் அதிகம் என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா? இதுவும் அதிர்ச்சியான தகவல் தான். பாம்புகளின் தலைநகரம் என்று இந்தியாவைத் தான் அழைக்கிறார்கள்.

காலிபிளவரால் கிடைக்கும் நன்மைகள் !

ஒவ்வொரு வருடமும் 81,000 பேர் பாம்புகளால் கடிபடுகிறார்கள். 11,000 பேர் ஆண்டுக்கு ஆண்டு உயிரிழக்கிறார்கள். 

ஒரு பீபீசி செய்தியின்படி, 1.2 மில்லியன் இந்தியர்கள், கடந்த 20 வருடங்களில் பாம்பு தீண்டி மரணித்துள்ளார்கள் என்று சொல்லப் படுகின்றது. இதில் பாதித் தொகையினர் 30க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதினர் என்று இந்த அறிக்கை மேலும் கூறுகின்றது. 

பாம்புகள் இல்லாத நாடு மற்றும் அதிக பாம்புகளை கொண்ட நாடு எது?

இதில் கால் பகுதியினர் பிள்ளைகள்..... இந்த மரணங்களில் பாதித்தொகை, மொன்சூன் பருவக் காற்று வீசும் ஜூன்-செப்டெம்பர் மாதங்களில் நிகழ்ந்துள்ளன. 

காரணம். இணைசேரும் நோக்குடன் தமது மறைவிடங்களிலிருந்து பாம்புகள் தொகையாக வெளியில் பரும் காலப்பகுதி இது தான்.. Russell's viper, Indian krait-இங்கு பிரதான ஆட்கொல்லி பாம்புகள்.

கீலாய்டு [Keloid] தழும்பு இது வேற !

சகாராவிற்கு தெற்கிலமைந்த ஆபிரிக்க கண்டப் பகுதி பாம்புகளின் அட்டகாசம் நிறைந்த இன்னொரு உலக உலக வலயமாகும். 

டிசம்பர் ஜியோகிரபிக் இதழின் ஒரு கட்டுரையில், 30,000 பேர் இங்கு வருடா வருடம் பாம்புக் கடியினால் இறந்து வருவதாக சொ்ல்லப் பட்டுள்ளது.

பாம்புக்கடி காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையை சரியாகச் சொல்ல முடியா விட்டாலும், உலக நாடுகளெங்கும், 5.4 மில்லியன் மக்கள் பாம்புக் கடிக்கு ஆட்படுகிறார்கள்.

பாம்புகள் இல்லாத நாடு மற்றும் அதிக பாம்புகளை கொண்ட நாடு எது?

உலக சுகாதார ஸ்தாபனம், பாம்புக் கடியினால் பாதிப்பு அடைபவர்களின்  தொகையை, 2030 அளவில் பாதித்தொகையாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்த சுளையாக 240 மில்லியன் டொலர் தொகை இவர்களுக்கு தேவைப் படுகின்றது.

குதிரைகளின் உடலில் பாம்பு விஷத்தை ஏற்றி, ஆன்டி பயோடெக்ஸ் என்ற விண மருந்து முறிப்பு மருந்தை தயாரிக்கிறார்கள். பாம்பு விஷம் விலைமதிப்பானது.

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

ஒரு மி.கிராம் விடத்தை பல ஆயிரம் டொலர்கள் செலவிட்டே, மருத்துவ நிறுவனங்கள் வாங்குகின்றன என்பது நம்மை அதிர வைக்கும் தகவல் தான். நாகபாம்பு விஷம் ஒரு கலன் (6 பாட்டில்) 153,000 டாலர்கள் பெறுமதியானவை என்கிறது ஒரு இணையப் பக்கம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings