சமீபத்திய காலமாக ரூபாய் நோட்டுகள் குறித்தான செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அந்த ரூபாய் நோட்டுகளில் எதுவும் எழுதப்பட்டு இருந்தால் அது செல்லாது என கூறப்படுகின்றது.
சில இடங்களில் இன்றும் இவ்வாறு பேனாவால் எழுதப்பட்ட நோட்டுகள் வாங்கப் படுவது இல்லை. சமீபத்திய காலமாக சமூக வலைதளத்திலும் இது குறித்தான செய்தியானது வெளியாகிய வண்ணம் உள்ளது.
குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் !
இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல் என ஒரு செய்தியும் பரவலாக பரவி வருகின்றது. அந்த செய்தியின் படி, புதிய நோட்டுகளில் எதையும் எழுதினால் அது செல்லாது என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்த அறிக்கையினை pib இந்தியா உண்மையை சரிபார்க்கும் விதமாக அலசி ஆராய்ந்து முடிவினை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இது உண்மை இல்லை என்ற மறுத்துள்ளது. ஆக கரன்சி நோட்டுகளில் எழுதினால் அது செல்லாது என்பது போலியான செய்தி என தெரிவித்துள்ளது.
இதனை வங்கிகளோ அல்லது வேறு ஏதேனும் கடைகளோ செல்லாது என வாங்க மறுக்க முடியாது எனவும் தெளிவு படுத்தியுள்ளது.
எனினும் ரூபாய் தாள்களில் பேனாவால் எழுதுவதால் அதன் பயன்பாட்டு காலம் என்பது குறைய வாய்ப்பிருக்கிறது. ஆக அப்படி யாரும் எழுத வேண்டாம் எனவும் pib அறிவுறுத்தி யுள்ளது.
உண்மையில் இது போன்ற செய்கைகள் பரவலாக காணப்படுகின்றது. ஆக இது போன்ற பழக்கங்களை நிறுத்திக் கொள்வதால், ரூபாய் தாள்களின் ஆயுட்காலம் என்பது அதிகரிக்கும்.
பல வருடங்களுக்கு அதனை நாம் வைத்து பயன்பெற முடியும். மற்றொரு அறிக்கையில், BHIM UPI இப்போது அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேனலைக் கொண்டுள்ளது.
மருந்தாகும் உணவு வகைகள்… சில டிப்ஸ்... !
அந்த சேவையைப் பெற, +918291119191 என்ற எண்ணில் Hi என்று மெசேஜ் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது குறித்து PIB நடத்திய ஆய்வில் அது உண்மை என உறுதிப்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments