திருப்பூர் மாவட்டத்தில் டாட்டூ தொழிலில் கலக்கி வருகிறார் அருணாச்சல பிரதேச கலைஞர். இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் டையுன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்சக்மா (26).
5ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் சிறுவயது முதலே பல்வேறு இடங்களில் வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பச்சை குத்தும் டாட்டூ கடையில் வேலை பார்த்த போது இந்த தொழிலை பழகி பின்னர் டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமணம் முடிந்த பின்னர் தமிழகம் வந்த சுரேஷ்சக்மா தற்போது திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் டாட்டூ ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
ரயிலின் பின்பக்கத்தில் 'X'-ன்னு எழுதபட்டு இருக்கும் - அது ஏன் தெரியுமா?
இது குறித்து சுரேஷ்சக்மா கூறியதாவது, தினமும் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன். ஒரு எழுத்து பச்சை குத்த 200 ரூபாயும், படம் வரைய இன்ச் ஒன்றிற்கு 300 ரூபாய் என கட்டணமாக வசூலிக்கிறேன்.
தற்போது அதிக அளவில் பெயர் எழுதவே மக்கள் விரும்பி வருகின்றனர். இதய வடிவம் மற்றும் பட்டாம்பூச்சி படங்களை டாட்டூவாக பதித்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறினார்.
Thanks for Your Comments