ஒரே ஓவரில் 100 மீட்டர் சிக்ஸர்.. வரலாற்று சாதனை படைப்பு !

0

கரீபியன் பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், 12ஆவது லீக் போட்டியில் செய்ண்ட் கிட்ஸ் அணியும், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

ஒரே ஓவரில் 100 மீட்டர் சிக்ஸர்.. வரலாற்று சாதனை படைப்பு !
இப்போட்டியில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ அணிக் கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய செய்ண்ட் கிட்ஸ் அணியில் ஓபனர் ஆண்ட்ரே பிளட்சர் 32 (17), ரூதர்போர்ட் 62 (38), கர்பன் பௌச் 30 (21) ஆகியோர் அதிரடியாக செயல் பட்டதால், செய்ண்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 178/5 ரன்களை சேர்த்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய ட்ரின்பாகோ அணியில், ஓபனர்கள் வால்டன் 6 (9) மற்றும் மார்டின் கப்தீல் 7 (8) ஆகியோர் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் 61 (32), டக்கர் 36 (31) இருவரும் அதிரடியாக விளையாடி, ஸ்கோரை உயர்த்தினார்கள்.

நத்தைகளை சாப்பிடும் பிரான்ஸ் மக்கள்…. சுவாரஸ்ய தகவல்கள் !

இதனைத் தொடர்ந்து கெய்ரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல் இருவரும் அதிரடியாக விளையாடி, விறுவிறுவென ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். 

அப்போது, 15ஆவது ஓவரில், நவீத்திற்கு எதிராக பொல்லார்ட் முதல் பந்தில், 4 மற்றும் 5ஆவது பந்தில் 101, 107, 102 மீட்டர் சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார். மேலும், கடைசி பந்திலும் 95 மீட்டர் சிக்ஸரை விளாசினார். 

இதனால், ட்ரின்பாகோ அணி 17.1 ஓவர்கள் முடிவில் 180/4 ரன்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. ஒரு ஓவரில், மூன்று முறை 100 மீட்டர் சிக்ஸர் அடிப்பது இது தான் முதல் முறையாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings