இதோ அதோ என்று ஒரு வழியாக உலகம் முழுவதிலும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கட்டாய வெற்றியை தர வேண்டிய கட்டாயத்தில் இருந்த இயக்குனர் நெல்சன், தனது பாணியில் வெற்றியை பெற்றிருக்கிறார் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?
அனிருத் இசை, கதாபாத்திரங்கள் தேர்வு என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பு இருந்ததால், ஜெயிலர் படத்தின் வெற்றி உறுதியானதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். என்ன இருந்தாலும், படத்தின் ஒன் மேன் ஆர்மி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டாருக்கு பெரிய வெற்றியை நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயிலர் தந்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் தான், அவர் இமய மலைக்குச் சென்றதாகவும் கூறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
முன்பதிவை அடிப்படையாக வைத்து உத்தேசமாக கணிக்கப்பட்ட முடிவுகளின் பட, ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூல் அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தேச பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:
தமிழ்நாடு- ரூ.26 கோடி முதல் ரூ.28 கோடி
ஆந்திரா/ தெலங்கானா- ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி
கர்நாடகா- ரூ.11 கோடி முதல் ரூ.13 கோடி
கேரளா- ரூ.4.5 கோடி முதல் ரூ.6 கோடி
இந்திய நகரங்கள்- ரூ.10 கோடி வரை
வெளிநாடு- ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி
ஒருவனுக்கு ஒருத்தி... திருமண கமிட்மென்ட் பற்றி அதிர வைக்கும் ஆய்வு !
முதல் நாள் வசூலாக ரூ.85 கோடி முதல் 105 கோடி வரை வசூலாகி யிருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள், துல்லியமான விபரங்களை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட வாய்ப்பு உள்ளது.
Thanks for Your Comments