இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா மிகவும் தரமான எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா (Mahindra), பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த நிறுவனம் கடந்த காலங்களில் இருசக்கர வாகன (Two Wheeler) உற்பத்தியில் கூட ஈடுபட்டு வந்தது. இதனை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தற்போது கை விட்டு விட்டது.
இருப்பினும், கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) எனும் துணை நிறுவனத்தின் வாயிலாக, ஜாவா (Jawa) மற்றும் யெஸ்டி (Yezdi) ஆகிய நிறுவனங்களின் டூ-வீலர்களை மஹிந்திரா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இது தவிர, தனது சொந்த பிராண்டான மஹிந்திரா கீழாகவே எதிர்காலத்தில் எப்போதாவது மீண்டும் இருசக்கர வாகன உற்பத்தியில் அது களமிறங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இத்துடன், ஆட்டோ ரிக்ஷா மற்றும் மினி லோடு வண்டிகள் ஆகியவற்றின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, எலெக்ட்ரிக் கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஓர் சூப்பரான மின்சார ஆட்டோ ரிக்ஷாவை மஹிந்திரா நிறுவனம் வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காபி தூளிலும் பளிச் என மின்னும் முகம்... காபி ஃபேஸ் பேக் !
நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஆட்டோ மாடலாக இ-ஆல்ஃபா சூப்பர் இருக்கின்றது. இதன் அதிகம் ரேஞ்ஜ் தரும் மாடலையே நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
அதற்கு அறிமுக விலையாக ரூ. 1.61 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிட தகுந்தது.
இந்த குறைவான விலைக்கே பல தரப்பட்ட சிறப்பம்சங்களை இ-ஆல்ஃபா சூப்பர் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
வலுவான மெட்டல்களைக் கொண்டே அதன் பாடிகளை நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. அத்துடன், அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரூஃப்பில் கைப் பிடிகள் என பாதுகாப்பு வசதிகளையும் அது சேர்த்திருக்கின்றது.
புதிய இ-ஆல்ஃபா சூப்பர் எலெக்ட்ரிக் ஆட்டோவை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துக் கொள்ள முடியும் என மஹிந்திரா கூறி இருக்கின்றது.
இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் ரேஞ்ஜ் திறன் என்றும் அது குறிப்பிடுகின்றது. ஆகையால், ஆட்டோ ஓட்டுநர்களால் கூடுதல் லாபத்தைப் பெற முடியும் என தெரிகின்றது.
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக இ-ஆல்ஃபா சூப்பர் எலெக்ட்ரிக் ஆட்டோவில் 140 ஏஎச் லீட் ஆசிட் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியை சுலபமாக சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக 18 A சார்ஜர் வழங்கப் படுகின்றது.
இந்த சார்ஜருக்கு 12 மாதங்கள் வாரண்டியையும், வாகனத்திற்கு 1 ஆண்டு வாரண்டியையும் மஹிந்திரா அறிவித்திருக்கின்றது. இதேபோல், பேட்டரிக்கு 18 மாதங்கள் வரை வாரண்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் 1.64 kW பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மின் மோட்டாரே கொடுத்திருக்கின்றது. நகரங்களின் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்ப இயங்க இந்த திறனே போதுமானது.
டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா? இந்த தகவல் தெரியுமா?
எதிர்பாரா விபத்து நேரங்களில் பாதிப்புக்குள்ளாகும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத் தகுந்தது.
அதே வேளையில், இந்த ஆட்டோவை எலெக்ட்ரிக் கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பெஸ்ட் -இன்- கிளாஸ் என கூறும் அளவிற்கு அதிக பாதுகாப்பு மற்றும் கம்ஃபோர்ட் அம்சங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
Thanks for Your Comments