பாறைக்கு அடியில் தங்க புதையல்... உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது !

0

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அஜித், அமரன், வருண் மூன்று பேர் தேன் எடுக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருகிலுள்ள மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். 

பாறைக்கு அடியில் தங்க புதையல்... உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது !
அப்போது மலையில் இருந்த பழங்கால கோயிலுக்கு அருகில் சென்றனர். இந்த சூழலில் அங்கிருந்த பாறைகளை நோட்டமிட்டனர். அப்போது பாறை ஒன்றின் கீழ் பித்தளை காசுகள் இருந்தன. 

இதைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்து மேலும் ஆராய்ந்தனர். அருகிலிருந்த பாறையை அகற்றி விட்டு மண்ணை தோண்டி யுள்ளனர். இதில் மேலும் சில காசுகள் இருப்பது தெரிய வந்தது. 

தொடர்ந்து தோண்டி பார்க்கையில் ஆச்சரியம் காத்திருந்தது. தங்க காசுகள் தென்பட்டன. புதையல், புதையல் என மூன்று பேரும் உற்சாக மடைந்தனர். 

ஆப்பிள் செலரி ஜூஸ் செய்வது எப்படி?

ஏராளமான தங்க காசுகள் இருப்பதை அறிந்து அனைத்தையும் தோண்டி எடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் ஆடு மேய்க்க வருண், சுப்பிரமணியம் இருவர் அந்த பக்கமாக வந்துள்ளனர்.

அவர்கள் தங்க காசுகள் தோண்டுவதை பார்த்தனர். உடனே அந்த இருவரையும் மூன்று இளைஞர்களும் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். வெளியே சொன்னால் அவ்வளவு தான் என்ற தொனியில் பேசி அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து தங்களுக்கு கிடைத்த தங்க காசுகள் உடன் மூவரும் புறப்பட்டு சென்றனர். இதை வெளியில் சொன்னால் மாட்டிக் கொள்வோம். எனவே தங்க காசுகளை உருக்கி விற்றுவிட திட்டமிட்டனர்.

அவ்வாறே தங்க காசுகளை உருக்கி கடை வீதிக்கு சென்று ரகசியமாக விற்றுள்ளனர். இந்த தங்கத்தை தங்களின் மூதாதையர்கள் பல ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்ததாக பொய் கூறினர். 

விற்ற தங்கத்தின் மூலம் 9 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அதை கொண்டு கார், ஆட்டோ என சொகுசு வாழ்க்கை வாழத் தொடங்கினர். கையில் ரொக்கமாகவும் பல லட்ச ரூபாய் வைத்திருந்தனர். 

கிராம வங்கியில் தாங்கள் வாங்கிய கடனையும் அடைத்தனர். இதற்கிடையில் மிரட்டி அனுப்பப்பட்ட இரண்டு பேரும் போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர். 

பாறைக்கு அடியில் தங்க புதையல்... உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது !

இதையடுத்து மூவரின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர். திடீரென அதிகப் படியான பணம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுந்தது. 

தக்க சமயம் பார்த்து மூவரையும் பிடித்து விசாரித்ததில் உண்மையை உளறி விட்டனர். அவர்களிடம் இருந்து 490 கிராம் தங்கம், 280 கிராம் தங்கக் காசுகள், கார், ஆட்டோ, ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சத்தான வெள்ளரிக்காய் தால் செய்வது எப்படி?

அஜித், அமர், வெங்கடேஷ்வர் என மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தங்க காசுகளை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில், பழங்கால விஜயநகர பேரரசை சேர்ந்த தங்க காசுகள் எனக் கண்டறியப்பட்டது. இது 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை புதையலாக பாறைக்கு இடையில் புதைந்திருந்து தற்போது வெளியே வந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings