35 லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல் எப்படி சிக்கியது?

0

மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து, அவர்களை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைத்துள்ளார். 

35 லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல் எப்படி சிக்கியது?
மேலும் அதை ஆபாச வீடியோவைப் பதிவு செய்து, பாதிக்கப் பட்டவர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் போலீசில் புகார் அளித்ததை யடுத்து, இந்த முழு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்தது. 

புகார்தாரர், நேஹா என்ற மெஹர் என அடையாளம் காணப்பட்ட பெண், டெலிகிராம் செயலியில் தன்னுடன் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் இருவரும் வாட்ஸ்அப்பில் பேச தொடங்கியதாகவும் கூறியுள்ளார். 

அப்போது, தனது கணவர் துபாயில் பணிபுரிவதாகவும், உடலுறவில் ஈடுபட விருப்பம் இருப்பதாகவும் அப்பெண்ண தெரிவித்தார். அவர் தனது புகைப்படங்கள் மற்றும் அவரது முகவரியையும் பகிர்ந்ததாகவும் புகாரளித்த நபர் தெரிவித்துள்ளார். 

அதன்படி மார்ச் 3 அன்று மாலை 3.30 மணியளவில், மெஹரின் இல்லத்திற்குச் சென்றதாக அந்த நபர் கூறினார். 

சிறிது நேரத்திற்குப் பிறகு, மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்து, தன்னை விசாரித்ததாகவும், பின்னர் அவர்கள் தன்னை தாக்க தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ. 3 லட்சம் தராவிட்டால், தன்னை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, மெஹரை திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று அந்த கும்பல் தன்னை மிரட்டியதாக அந்த நபர் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து PhonePe பேமெண்ட் செயலி மூலம் மொபைல் எண்ணுக்கு 21,500 ரூபாய் பரிமாற்றம் செய்ததாக அந்த நபர் குற்றம் சாட்டினார். 

இரவு 8 மணி வரை தன்னை கும்பல் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் கூடுதலாக 2.5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். 

35 லட்சம் பணம் பறித்த மோசடி கும்பல் எப்படி சிக்கியது?

பின்னர் கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறிய போது அவர்கள் அதை எடுக்க என்னுடன் வந்தனர். ஆனால் ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடி குறித்த விசாரணையில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கியதாகவும், மிரட்டல் மூலம் 35 லட்ச ரூபாய்க்கு மேல் அந்த மோசடி கும்பல் குவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுவரை, அந்த மோசடி கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் மெஹரின் இருப்பிடம் மும்பையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings