4 மீட்டர் பள்ளத்தை தாண்டிய பிரக்யான் ரோவர்... இஸ்ரோ !

0

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரை யிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது. 

4 மீட்டர் பள்ளத்தை தாண்டிய பிரக்யான் ரோவர்... இஸ்ரோ !
பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை பிரக்யான் ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது என்றும், 

3 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றிக் கொண்டு சமதள பாதையில் நகர்ந்து சென்றது என்றும் இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது. 

முன்னதாக நிலவின் வெப்ப நிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. 

விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப் படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப நிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings