ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டு 4 ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டிருக்கும் வீராங்கனை டூட்டி சந்த், தனக்குப் புற்றுநோய் இருந்ததாகவும் அதற்கான மருந்துகளையே தான் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைக்காலத் தடையை விதித்திருந்தது. இதையடுத்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வீராங்கனை டூட்டி சந்த் மேல் முறையீடு செய்தார்.
ஆனால் தான் ஊக்க மருந்தைப் பயன்படுத்த வில்லை என்பதை அவர் நிரூபிக்கத் தவறி விட்டதால் தற்போது 4 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டிருக்கிறது.
அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தும் தற்போது தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளன. இது குறித்து பேசிய டூட்டி சந்த், நான் சவால் செய்திருந்த வழக்கில் தோல்வியடைந்து 4 ஆண்டுகள் தடையைப் பெற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
(getCard) #type=(post) #title=(You might Like)
வரவிருக்கும் காலங்களில் நான் கடினமாக உழைத்து இந்தியாவைப் பெருமைப்படுத்தும் அளவுக்கு எனக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க விளையாட்டு ஆணையம் மற்றும் அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறுவதற்கான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற போது, எனக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது.
இதனால் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டேன். அப்போது மருத்துவர் சுதிப் சத்பதி உனக்கு லெவல் 1 கேன்சர் அறிகுறி இருக்கிறது என்று என்னிடம் கூறினார்.
பிறகு, இந்த மாதிரியை நாடாவிடம் (தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை) கொடுத்த போது டூப் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இது தான் தடைக்கான காரணம். இதே மருத்துவ அறிக்கையை வேறொரு நிபுணருக்கும் அனுப்பினேன்.
உடலுறவுக்கு பின் ஆணை விழுங்கும் பெண் அனகோண்டா... அதிர்ச்சி தகவல் !
அவர், இது போல் இன்னும் சிலருக்கும் நடந்துள்ளது எனக் கூறினார் என் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்காக வலி நிவாரணி எடுத்ததை ஊக்கமருந்து பயன்படுத்தியது எனக்கூறி சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை தடை விதித்திருப்பது, இணையத்திலும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
Thanks for Your Comments