வாக்கிங், சைக்கிளிங்... 40 வயதாகியும் திருமணம் செய்துக்கலை... சீரியல் ஸ்ருதி ராஜ் !

0

சன் டிவியில் ஒளிப்பரப்பான தென்றல் சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். தொடர்ந்து தாலாட்டு சீரியல்களில் நடித்தார்.

வாக்கிங், சைக்கிளிங்... 40 வயதாகியும் திருமணம் செய்துக்கலை... சீரியல் ஸ்ருதி ராஜ் !
இவர் 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய்யுடன் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார் ஸ்ருதி. 2009ஆம் ஆண்டு தென்றல் சீரியல் மூலம் பிரபலமடைந்தார். 

அதன் பிறகு தான் ஆபிஸ், அழகு சீரியல்களில் நடித்திருந்தார். 1998 ஆம் ஆண்டு இனி எல்லாம் சுகமே என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். 

இதைத் தொடந்து காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி ராஜ். 

ஸ்டார் விஜய்யில் அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலிலும் அபூர்வ ராகங்களில் சீரியலிலும் நடித்திருந்தார். பிறகு 2018ஆம் ஆண்டு முதல 2020 ஆம் ஆணடு வரை அழகு சீரியலில் சுதா எனும் கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒரு முறை ஸ்ருதி ராஜ் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், என் சொந்த ஊர் கேரளா, குருவாயூர். நான் ஸ்கூல் படிக்கும் போதே அம்மாவுக்கு என்னை சினிமாவில் நடிக்க வைக்கணும் ஆசை.

இன்னும் சொல்லபோனா எங்க ஊர்ல  யாருமே சினிமா பக்கமோ டி.வி பக்கமோ போனது கிடையாது. அப்படியிருக்கும் போது நான் சினிமாவுல நடிச்சுட்டு ஊருக்கு திரும்பிப் போகும் போது எல்லோரும் எங்கள விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

நீதானம்மா அந்த சினிமாவுல நடிச்சிருந்தனு கேட்கும் போது, அப்படியே பறக்கிற மாதிரி இருந்தது. நான் ஏழாவது படிக்கிறப் போவே ஒரு மலையாளப் படம் மூலமாக சினிமாவுக்கு வந்துட்டேன்.

ஒரு மலையாளப் பத்திரிகையில் வந்த என் போட்டோவைப் பார்த்து, மாண்புமிகு மாணவன் தமிழ்ப் படத்தில் முக்கியமான ரோல் கிடைச்சுது. ஸ்கூல் பொண்ணான நான், அந்தப் படத்தில் காலேஜ் ஸ்டூடண்ட்டாக நடிச்சது வித்தியாசமான அனுபவம்.

அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அப்போ கேரளாவி லிருக்கும் எங்கக் கிராமத்துலேருந்து அப்பாவோடு சென்னைக்கு வந்து நடிச்சுட்டுப் போவேன்.

சினிமா பின்புலம் இல்லாததால நல்லது கெட்டது சொல்லக்கூட எனக்கு உடன் யாருமில்லை. அதனால நல்லா படிச்சுட்டிருந்த என்னால படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியலை. 

மற்ற மொழிப் படங்களால் கூட எனக்கு ஓரளவுக்குப் புகழ் கிடைச்சுது. ஆனா, தமிழ்ப் படங்களால் பெருசா ரீச் எனக்குக் கிடைக்கலை. ஒரு கட்டத்துல ஆக்டிங்கை நிறுத்திடலாம்னு நினைச்ச சமயத்துல தான் தென்றல் வாய்ப்புக் கிடைச்சுது.

அதுக்குப் பிறகு எங்க போனாலும் துளசினு கூப்பிட ஆரம்பிச்சாங்க. சீரியல் எனக்கு அம்சமா செட் ஆகிட்டதால, சினிமாவுல பெருசா கவனம் செலுத்துறதில்லை. 

ஆனா, நல்ல கேரக்டர் வந்தா சினிமாவிலும் நடிப்பேன், என்று பல விஷயங்களை கூறினார். ஸ்ருதி ராஜ் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வாக்கிங், சைக்கிளிங்... 40 வயதாகியும் திருமணம் செய்துக்கலை... சீரியல் ஸ்ருதி ராஜ் !

எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது. எனவே என் திருமணம் குறித்து நான் எதையும் யோசிக்க வில்லை. 

என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறுகிறார் ஸ்ருதி.

ஸ்ருதி ராஜுக்கு சைக்கிளிங் செல்லும் பழக்கம் உள்ளது, தினமும் காலை நேரம் அல்லது விடுமுறை நாட்களில் சைக்கிளிங் செல்கிறார். தினமும் காலையில் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

உடல் எடையை குறைக்க அதிக கொழுப்புகள், எண்ணெய் உணவுகளை நிறுத்திக் கொண்டார். ஆரோக்கியமான உணவுகளை 6 முறை பிரித்து சாப்பிடுகிறார். இதனால் 40 வயதிலும், அழகாக, ஃபிட்டாக இருக்கிறார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings