சுறாக்களை நம்மில் பலரும் பார்த்திருப்போம். ஆனால் கோப்ளின் சுறா (Goblin shark) பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். பார்த்திருக்க மாட்டோம். காரணம் இது மிகவும் அரிதான ஒரு உயிரினம்.
இதன் பொதுவான பெயர் கோப்ளின் சுறா. அறிவியல் பெயர் மிட்சுகுரினா ஓவ்ஸ்டோனி (Mitsukurina owstoni). கோப்ளின் சுறாக்கள் அனிமாலியா மீன் வகையைச் சேர்ந்த மிட்சுகுரினிடே இனத்தைச் சேர்ந்தவை.
இந்த மிட்சுகுரினிடே குடும்பம் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும் இன்று ஒரே ஒரு வகை கோப்ளின் சுறா இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
ஆழமான கடல் பகுதியில் வசிப்பதால் இந்த இனங்களை பற்றி அதிகம் ஆராய முடியாமல் அதன் எண்ணிக்கை இனங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் பதிவுகள் அதிகம் இல்லாமல் இருக்கிறது.
கோப்ளின் சுறாக்கள் கடலின் ஆழத்தில் வாழ்கின்றன. குறிப்பாக இரவில் மட்டுமே நீரின் மேற்பரப்புக்கு அருகில் வருகின்றன.
அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் !
அவை பொதுவாக இந்தியப் பெருங்கடல்கள், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், கலிபோர்னியா, இலங்கை மற்றும் புளோரிடாவுக்கு அருகிலுள்ள ஆழ்கடலில் ஒரு சில காணப்பட்டன. கடல் பகுதிகளின் ஆழத்தில் கோப்ளின் சுறா வாழ்விடங்களின் பரவல் அதிகமாக உள்ளது.
இது ஜப்பான், கலிபோர்னியா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் புளோரிடாவில் முக்கியமாகக் காணப்படுகிறது.
இதன் நீளம் 10 லிருந்து13 அடி. முழு வளர்ச்சியடையும் போது எடை 210 கிலோ கிராம் வரை இருக்கும். இதன் ஆயுட்காலம் 16 லிருந்து 60 ஆண்டுகள் வரை இருக்கலாம் என சொல்லப் படுகிறது.
25 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக் கூடியது. கோப்ளின் சுறாக்கள் வாழும் புதை படிவங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன. அவை ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை ஆழ்கடல் சுறா ஆகும்.
இது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து ஊதா சாம்பல் வரை அசாதாரண நிறத்தைக் கொண்டுள்ளது.
தட்டையான மூக்கு மற்றும் நீண்ட தாடைகள் கொண்டது. பெரிய கோப்ளின் சுறா குறுகிய நேரத்தில் 4,270 அடி ஆழம் வரை டைவிங் செய்யும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.
இதன் குட்டிகள் ஆழமற்ற நீரை விரும்புகின்றன என்றாலும் இந்த சுறாக்கள் நீருக்கடியில் 890 அடி முதல் அதிகபட்சம் 4300 அடி வரை ஆழத்தில் வாழ்கிறது. கோப்ளின் ஷார்க் வயதாகும் போது அதன் மூக்கு சுருங்குகிறது.
கோப்ளின் சுறாவின் மூக்கின் நீளம் அதன் வயதுக்கு ஏற்ப குறைகிறது. கோப்ளின் ஷார்க் பல வரிசைகளில் பல பற்களைக் கொண்டுள்ளது. இந்த சுறாவுக்கு வாய் நிறைய பற்கள் உள்ளன.
மேல் தாடையில் 35 முதல் 53 வரிசை பற்கள் உள்ளன. கீழ் தாடையில் 31 முதல் 62 வரிசை பற்கள் உள்ளன. கோப்ளின் ஷார்க் வேட்டையாடும் முறை வித்தியாசமானது. இது மெதுவாக நீந்த கூடியது.
பெண்மையை அதிகரிக்கும் கல்யாண முருங்கை !
பார்வைக் குறைவு காரணமாக இது பதுங்கியிருந்து மீன்களை வேட்டையாடி சாப்பிடும். இதற்கு குறைந்த அடர்த்தி கொண்ட சதை உள்ளது.
மேலும் பெரிய எண்ணெய் மிகுந்த கல்லீரல் உள்ளது. இதனால் அவைகளால் எளிதில் மிதக்க முடியும். தண்ணீரில் அதிக அசைவுகள் இல்லாமல் மெதுவாக மிதந்து செல்லும்.
இப்படி அமைதியாக மெதுவாக இந்த மீன் செல்வதால் சிறிய மீன்கள் இதை பெரிய அளவில் கவனிப்பதில்லை. இந்த நேரத்தில் அதன் அருகில் சென்று வாயை திறந்து சிறிய மீன்களை பிடித்து சாப்பிடுகிறது.
கோப்ளின் ஷார்க் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவ தில்லை. இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் வசிப்பதால் கோப்ளின் ஷார்க் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக கருதப்படவில்லை.
இந்த மீன்கள் ஆழ்கடலில் வசிப்பதால் பெரிய அளவு பிடிபடுவதில்லை. இருந்தாலும் ஏப்ரல் 2003 இல் 100 க்கும் மேற்பட்ட கோப்ளின் ஷார்க் தைவான் அருகே பிடிபட்டன. இதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை.
பெண் சுறாக்கள் தங்கள் முட்டைகளை தங்களுக் குள்ளேயே வைத்திருக்கின்றன. இது உள் கருத்தரித்தல் என்று அழைக்கப் படுகிறது. முட்டை யிலிருந்து குட்டி சுறாவை பெற்றெடுக்கிறது.
சூட்டை குறைக்கும் மல்லிகை பூவின் எண்ணெய் !
உயிருடன் பிறக்கும் இந்த விலங்குகள் விவிபாரஸ் என்று அழைக்கப் படுகின்றன. இளம் சுறா 32 அங்குல அளவில் இருக்கும். இது முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையிலான தகவல் ஆகும்.
Thanks for Your Comments