பீகார் மாநிலம் பாட்னாவில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பயணியிடம் வழிப்பறி செய்த திருடர்கள் அந்த பயணியை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டனர். இதில் பயணிக்கு கை எலும்பு உடைந்து விட்டது.
அவர்களை கைது செய்ய சென்ற போது போலீஸார் அசந்து விட்டனர். சந்தோஷை கைது செய்ய சென்ற போது அவரது வீடு 5 மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
மூன்று பேரிடம் விசாரித்த போது அவர்கள் மூன்று பேரும் பகலில் ஆட்டோ ஓட்டுவது, ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருக்கும் நகை, பணத்தை வழிப்பறி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது.
கொல்கத்தாவில் இருந்து தங்க வியாபாரிகள் தங்க ஆபரணங்களை விற்பனை செய்ய ரயில் மூலம் பாட்னா வருவது வழக்கம்.
அப்படி ரயிலில் தங்கத்துடன் வரும் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களை தங்களது ஆட்டோவில் ஏற்றிச் செல்வது வழக்கம். ஆட்டோவில் ஏற்கனவே ஒருவர் இருப்பார்.
ரயில் பயணி வந்து அமர்ந்தவுடன் மற்றொருவர் வந்து அமர்ந்து கொள்வார்.
அப்படி இறங்கும் போது பயணி எதாவது பிரச்னை செய்தால் பயணியை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு விட்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இத்திருட்டு வெளியில் தெரியாமல் இருக்க ஆட்டோவை வேறு ஒருவர் பெயரில் வாங்கி இருந்தனர். இது போன்று 12-க்கும் அதிகமானோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 6.63 லட்சம் பணம், தங்கம், வெள்ளி, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் வைபவ் சர்மா கூறுகையில், வீருநாத் பல இடங்களில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் வாங்கி இருக்கிறார்.
வீருநாத்திடம் விசாரித்த போது அவர்களின் முக்கிய தொழில் ஆடு திருடுவதாகும். பகலில் கிராமங்களில் சுற்றிப் பார்ப்பதும், இரவில் சென்று ஆடுகளை திருடிச் சென்று மார்க்கெட்டில் விற்பனை செய்வதும் தான் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.
வீருநாத் ஆட்டோ ஓட்டுவதில் திறமையானவர். அதனை பயன்படுத்தி பகல் நேரத்தில் மூன்று பேரும் சேர்ந்து ஆட்டோவில் ஏறும் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அப்படி செய்தி வந்திருந்தால் உடனே மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விடுவது வழக்கம். சந்தோஷை நாங்கள் கைது செய்ய சென்ற போது வீடு ஐந்து மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தது.
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் !
வீடு முழுக்க எல்இடி டிவி, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பங்களாவின் மதிப்பு 10 கோடி இருக்கும். இது தவிர 1.75 கோடி அளவுக்கு நிலங்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் சிக்கி இருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் இருந்து ஜூலை வரை 8 ஆட்டோ வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருக்கும் சொத்து விபரங்களை சேகரித்து வருமான வரித்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார். vikatan
Thanks for Your Comments