கிரீஷ் மாத்ருபூதம் அக்டோபர் 2010-ல் தமிழகத்தின் சென்னையில், ஏர் கண்டிஷன் கிடங்கில் இருந்து தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அவருடன் அப்போது 6 பேர் கொண்ட குழு இருந்தனர்.
அந்நிறுவனம் 2018-ல் யூனிகார்ன் ஆனது. 2021-ல், இந்நிறுவனம் 13 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமெரிக்காவில் உள்ள NASDAQ-ல் பட்டியலிடப் பட்டது.
மாத்ருபூதம் தனது நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையில் இருந்து கலிபோர்னியாவின் சான் மேடியோவிற்கு மாற்றினார். இவரது நிறுவனம் 120 நிறுவனங்களில் 50,000 வாடிக்கை யாளர்களுக்கு சேவை செய்கிறது.
மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?
விற்பனை, உற்பத்தித்திறன், சந்தைப் படுத்தல், மனித வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை ஆதரிக்கும் மென்பொருள் கருவிகளைக் கொண்ட அவரது நிறுவனம் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
மாத்ருபூதம் பயிற்சியின் மூலம் பொறியாளரானவர். அவர் ஸோஹோ நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்காக ஸோஹோ நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
2015 வரை, அவர் வளர்ந்து வரும் வணிகத்தை நிர்வகித்து வந்தார். பின்னர், ஒரு நிர்வாகக் குழுவை நியமித்தார்.
பல ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக மாறினர்
மாத்ருபூதத்தின் நிகர மதிப்பு 700 மில்லியன் டாலர்களாக (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 5788 கோடி) பெரிதாகி விட்டது.
தமிழகத்தின் ஶ்ரீரங்கத்தில் பிறந்தவர் தான் கிரிஷ். பிள்ளைப் பருவத்திலேயே பெரும் கஷ்டத்தை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
அவருடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவரும் பிரிய, கிரிஷ் அவருடைய அத்தை வீட்டில் தான் வளர்ந்தார். உலகத்தின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர்.
அமெரிக்காவின் ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் இந்தத் தமிழன் நடத்தும் பங்கை வாங்கப் போட்டி போட, அது உலகச் செய்தியாக மாறியிருக்கிறது. அவர் தான் கிரிஷ் மாத்ருபூதம்.
(nextPage)
சாஸ்த்ரா கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்
12-ம் வகுப்பு படித்து முடித்தவுடன், இன்ஜினீயரிங் படிக்க விரும்பினார். 12-ம் வகுப்பில் அவர் நல்ல மார்க் வாங்கி யிருந்ததால், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், படிப்புச் செலவுக்கான கட்டணத்தைக் கட்ட அவருடைய அப்பாவிடம் பணம் இல்லை. பணத்தைத் திரட்ட அங்கும் இங்கும் அலைந்தார். கடன் வாங்கியாவது மகன் விரும்பும் படிப்பைப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவர் ஆசை.
எங்கும் பணம் கிடைக்காத நிலையில், அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கடன் கேட்க, அவர் பணம் தர மறுத்ததுடன், மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே என்றும் அறிவுரை சொன்னார்.
வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
(இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சாஸ் பூமி கருத்தரங்கில் அவர் இதைச் சொல்லி, அடக்க முடியாமல் அழுதார்!) இதைக் கேட்டு கிரிஷ் மட்டுமல்ல, அவருடைய தந்தையும் மனமொடிந்து போனார்.
அந்தப் பேச்சு, கிரிஷின் தந்தையை ஆழமாகக் காயப்படுத்த, யார் யாரிடமெல்லாமோ கடன் கேட்டு, கல்லூரியில் பணம் கட்டி, கிரிஷை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்.
கல்லூரியில் படித்து முடித்த கிரிஷுக்கு கேம்பஸில் வேலை கிடைக்கவில்லை. படித்து முடித்தவுடன் வேலைக்குப் போகவில்லை என்றாலே, நம்மூரில் நாலு பேர் நாலு விதமாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா...
ஊர் வாயை அடைக்க சென்னையில் எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தார். எம்.பி.ஏ படித்து முடிக்கிற அதே நேரத்தில், ஜாவாவைக் கற்றுத் தருவதில் கில்லாடியாகவும் இருந்தார் கிரிஷ்.
ஆசிரியர் வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சிஸ்கோ நிறுவனத்தின் ஆப்ஷோர் சென்டரை அப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் நடத்திவர, அதில் அவருக்கு ட்ரைனர் வேலை கிடைத்தது.
நான் அடிப்படையில் ஓர் ஆசிரியர் என்று ஸ்டைலாகச் சொல்வார் கிரிஷ்.2001-ம் ஆண்டில் அவருக்கு ஶ்ரீதர் வேம்பு நடத்திவந்த ஜோஹோ நிறுவனத்தில் ப்ரீசேல்ஸ் என்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தார்.
அங்கு வேலைக்குச் சேர்ந்த 18 மாதங்கள் வரை மற்றவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் வேலையைத் திருப்தியாகச் செய்து கொண்டிருந்தார்.
அதன் பிறகு தான் அவருக்குள் புராடக்ட் டெவலப்மென்ட் குறித்த வேட்கை இருப்பதைக் கண்டுபிடித்தார்.
(nextPage)
புராடக்ட் மேனேஜர்
ஆனால், அந்த நேரத்தில் புராடக்ட் மேனேஜரின் வேலை பற்றி கிரிஷூக்கு முழுமையாகத் தெரியவில்லை. என்றாலும் பலப்பல தவறுகளை செய்து தான் அந்த வேலையைக் கற்றுக் கொண்டார் கிரிஷ்.
ஆனால், வேலையில் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் ஜோஹோ நிறுவனத்துக்கு மிகப் பெரிய அளவில் வருமானத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.
2010-ம் ஆண்டு ஜோஹோ நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட் என்கிற அளவுக்கு வளர்ந்தார். நல்ல சம்பளம், நல்ல வேலை, அன்பான மனைவி, குழந்தைகள் என நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது கிரிஷின் வாழ்க்கை.
அந்த நிம்மதியை அனுபவித்தபடி வாழ்க்கையை ஓட்டி முடித்து விட கிரிஷுக்கு விருப்பமில்லை. அவரிடம் இருந்த தொழில்முனைவு அவரை சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வலியுறுத்திக் கொண்டிருந்தது.
2010-ல் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து விலகினார். அவருடன் வேலை பார்த்துவந்த சான் கிருஷ்ணசாமி மற்றும் நான்கு பேருடன் சேர்ந்து, ஃப்ரெஷ் டெஸ்க் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஹெச்.ஆர், ஃபைனான்ஸ் எனப் பல துறைகள் பற்றி முழுக்க தெரியாது என்றாலும் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க அதிக ஆர்வம் இருந்ததால் துணிந்து ஆரம்பித்து விட்டார்.
எதையும் தொடர்ந்து செய்வதன் மூலமே கற்றுக் கொள்ள முடியும் (Learning by Doing) என்பதே அவரது அணுகு முறை.
(getCard) #type=(post) #title=(You might Like)
ஒரு விஷயத்தை ஒன்றுக்கு இரண்டு முறை செய்தால், அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைப்பவர். அந்தக் கலாசாரத்தை தன்னுடைய அலுவலகத்தில் எல்லோருக்கும் பழக்கப் படுத்தினார்.
சரியாக மூன்று நாள் கழித்து, ஆஸ்திரேலியா விலிருந்து ஒரு போன்கால் வந்தது. அவர்களுடைய புராடக்ட்டை இரண்டரை மணி நேரம் பயன்படுத்திப் பார்த்தார்கள். உடனே கிரெடிட் கார்டில் பணம் கட்டி விட்டார்கள்.
(அந்த முதல் கஸ்டமர் இன்றும் வாடிக்கையாளராக இருக்கிறாராம்!) அடுத்த சில வாரங்களில் நான்கு கண்டங்களி லிருந்து ஆறு கஸ்டமர்கள் இருந்தார்கள். முதல் 100 நாள்களில் 100 கஸ்டமர்களாகக் கிடைத்தார்கள்.
200 நாள்களில் இது 200-ஆக உயர்ந்தது. இன்றைக்கு கிரிஷின் நிறுவனத்தின் மொத்த கஸ்டமர்களின் எண்ணிக்கை 50,000-த்துக்கும் மேல். ஏறக்குறைய 4,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.
நல்ல வளர்ச்சியும் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ள தொழில்களில் முதலீடு செய்து, அந்த வளர்ச்சியையும் லாபத்தையும் அதிவேகத்தில் பெற நினைப்பது தான் வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகளின் நோக்கம்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யா இந்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகளைப் பற்றி பேசுவதைப் பார்த்திருப்பீர்கள்.
சூர்யாவைப் போலவே, இந்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகள் எல்லாம் தங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் கிரிஷ் நினைத்துக் கொண்டிருந்தார்.
(nextPage)
கிரிஷின் நிறுவனம் வளரும் வேகம்
கடன் வாங்கியோ, வென்ச்சர் கேப்பிடல் போன்ற நிறுவனங்க ளிடமிருந்து முதலீட்டைப் பெற்றோ தொழில் செய்யக் கூடாது.
நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பவர் ஶ்ரீதர் வேம்பு.
ஆனால், தொழிலைப் பெரிதாக வளர்க்க வேண்டுமெனில், வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்க ளிடமிருந்து முதலீட்டைப் பெறுவதில் தப்பில்லை.
அவர்களுக்கும் நமக்கும் சரியான புரிந்து கொள்ளல் இருந்தால் அதைத் தாராளமாகச் செய்யலாம் என்று நினைப்பதுடன், தொழில் நன்றாக நடக்கும் போதும், முதலீட்டைப் பெற வேண்டும்.
வேலையில் சேரும் போதே வெற்றிக்கு உத்தரவாதம்... சம்பளத்தில் ஒரு மேஜிக் !
தொழில் அவ்வளவு நன்றாக நடக்கவில்லை என்றாலும் முதலீட்டைப் பெற வேண்டும் என்று சொல்பவர் கிரிஷ். எனவே, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்க ளிடமிருந்து முதலீட்டைப் பெற்றார்.
இதுவரை பல்வேறு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்க ளிடமிருந்து அவர் திரட்டி நிதி சுமார் 300 மில்லியன் டாலருக்கு மேல்!
இத்தனை பெரிய வளர்ச்சியை கிரிஷின் ஃப்ரெஷ் வொர்க்ஸ் நிறுவனம் அடைந்திருந்தாலும், ஆரம்ப காலத்தில் சென்னையில் இருந்தபடியே பல ஆயிரம் வாடிக்கை
யாளர்களைப் பெற்றார் கிரிஷ். இதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது, சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம்.
அதாவது, ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அதை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடுவது பழைய நடைமுறை.
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரை முழுத் தொகை கொடுத்து வாங்காமல், மாதம்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறோமோ, அதற்குரிய பணத்தை மட்டும் கட்டி பயன்பெறுவது சாஸ்.
இந்தத் தொழில்நுட்பம் வந்தபிறகு, உலகின் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானால் சாஃப்ட்வேர் சர்வீஸைத் தந்து பணம் சம்பாதிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்ட பிறகு, அதை முழுமையாகப் பயன்படுத்தி வளர ஆரம்பித்தார் கிரிஷ்.
(nextPage)
அதிகரித்த புராடக்டுகளின் எண்ணிக்கை
கிரிஷின் நிறுவனம் அதிவேகமாக வளர்ந்த அதே நேரத்தில், அவர் தயார் செய்து அளிக்கும் புராடக்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஆரம்பத்தில் சி.ஆர்.எம் என அடிப்படையான சில சேவைகளைத் தந்த அவரது நிறுவனம், பிற்பாடு பலப்பல சேவைகளை அளிக்கத் தொடங்கியதால், நிறுவனத்தின் பெயரை ஃப்ரெஷ் டெஸ்க் என்றிருந்ததை ஃப்ரெஷ் வொர்க்ஸ் என்று மாற்றினார்.
உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்தால்? உபயோகமான தகவல்கள் !
இந்த ஐ.பி.ஓ மூலம் ஃப்ரெஷ் வொர்க் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு உயர்ந்ததுடன், இந்த நிறுவனத்தின் 500 பணியாளர்கள் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள்.
இதில் 70 பேர் 30 வயதுக்குக்கீழ் இருக்கிறார்கள். முன்பு இந்த நிறுவனத்தின் 90% ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்கு அளிக்கப்பட்டது.
ஆனால், சமீப காலத்தில் இந்த நிறுவனத்தில் பலரும் வேலைக்குச் சேர்ந்தததில் தற்போது 76% பேரிடம் மட்டும் பங்கு இருக்கிறது.
உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு தருகிறீர்களே, ஏன் என்று கேட்டால், நான் மட்டும் முன்னேறினால் போதாது.
என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்று பதில் சொல்கிறார் கிரிஷ் மாத்ருபூதம். இந்திய ஸ்டார்ட் அப் உலகின் சூப்பர் ஸ்டார்தான் கிரிஷ் மாத்ருபூதம்!
Thanks for Your Comments