மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 33 ஆயிரத்து 326 பேர் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட விண்ணப்ப பதிவு நாளையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் 2-வது கட்ட விண்ணப்ப படிவம் வழங்கும் பணி ஒரு சில இடங்களில் தொடங்கி யுள்ளது. 102 வார்டுகளுக்கு உட்பட்ட 724 ரேசன் கடைகள் பகுதியில் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதற்கிடையில் விண்ணப்பங்களை பதிவு செய்த குடும்பத் தலைவிகளின் விவரங்கள் சரி பார்க்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணி வருகிற 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடு வீடாக நடக்கிறது.
(getCard) #type=(post) #title=(You might Like)
2-வது கட்ட சிறப்பு முகாம்கள் முடிந்தவுடன் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சரி பார்க்கும் பணி தொடங்குகிறது.
தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமலும் குடும்ப தலைவிகள் தவறான தகவல்களை கொடுத்து உதவியை பெறுவதை தடுக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரமாக நடைபெற உள்ளது.
Thanks for Your Comments