தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவருடைய தலைமைப் பண்பு இன்று வரை பல கிரிக்கெட் வல்லுநர்களாலும் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இந்திய அணி தோல்வியைத் தழுவும் போதெல்லாம், தோனியின் தலைமைப் பண்பே பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் இணைப்புப் பாலமாக தோனி விளங்கி வருகிறார்.
தோனி இன்றுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், அவரை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
இணைய தளங்களில் அவருடைய ஓய்வு பற்றிய செய்திகளை ரசிகர்கள் இன்று வைரலாக்கி வருகின்றனர். கிரிக்கெட்டைத் தவிர தோனி, விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
அது போக, மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங்கும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் தமிழில் LGM (Lets Get Married) என்ற திரைப்படத்தைத் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், நடிகர் விஜய் அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் தோனி, விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இருப்பினும், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Thanks for Your Comments