மது குடிப்பது மன சோர்வுக்கு நல்லதா? சிறுகதை !

0

காட்டுக்குள்ள ஒரு துறவி. தான் உண்டு.... தன்னுடைய தவம் உண்டு... ன்னு நிம்மதியா தவம் செஞ்சுகிட்டு இருந்தார்.

மது குடிப்பது மன சோர்வுக்கு நல்லதா? சிறுகதை !
ஒரு நாள் அவருக்கு முன்னாடி ஒரு பூதம் வந்துருச்சு! உன்னைய திங்க போறேன்! அப்படின்னு சொன்னதும் துறவி, அடப்பாவி... நான் யாரொருவருக்கும் துரோகம் பண்ணது இல்ல. 

மனசால கூட நினைச்சதில்ல. என்னைய போய் திங்க போறியே? என்னை விட்டுடு. நான் போக வேண்டிய தூரம் வேற!ன்னு கெஞ்சுறாரு. அப்படின்னா நீ ஒரு தப்பு செஞ்சா நான் விட்டு விடுவேன்! ன்னு சொல்லுது பூதம்.

தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான் !

துறவி தப்பா? அதெல்லாம் ஆப்ஷன் கொடுக்க முடியுமா?ன்னு கேட்கிறார். சரி, மூணு தப்பு சொல்றேன்! அந்த மூணுல ஏதாவது ஒன்னு நீ செஞ்சா போதும்ன்னு சொல்லுது.

சரி. சொல்லு!ன்னு கேக்குறாரு.

ஒரு அழகான பொண்ணு முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டி இந்த பொண்ண கற்பழிக்கணும் அப்படின்னு சொன்னதும், அடப்பாவி பூதமே! எவ்வளவு பெருசா தப்பு செய்யுறது? வேற சொல்லு? வேற சொல்லு? அப்படின்னு கேட்கிறார்.

அடுத்து ஒரு பச்சக் குழந்தையை மிதிச்சே கொல்லனும் ன்னு பூதம் கொண்டு வருது. துறவி நெஞ்சை அடைச்சு கீழே விழுந்துட்டாரு. ஐயோ சண்டாளா! போய்யா பூதம். 

இது அதை விட பெரிய கொடுமையால இருக்கு? வேற சொல்லு ? வேற சொல்லு?ண்ணுறாரு. சரிய்யா ! ஒன்னும் வேண்டாம். இந்தா டாஸ்மாக்ல வாங்குன ஒரு கட்டிங் மட்டும் அடிச்சிடு! 

நான் உன்னைய விட்டுட்டு போரேன்னுது. அடபூதமே ! இதை முதலில் சொல்லப்படாதா? உடனே செஞ்சி இருப்பேனே? அப்படின்னு கட்டிங்க போடுறாரு .போதை தலைக்கு ஏறுது. 

அழகான பொண்ண பார்த்ததும் காமமும் ஏறுது . ரேப் பண்ற மோடுல அந்த பொண்ணு மேலே பாயுறாரு .அந்நேரம் பாத்து அந்த புள்ள காலை பிடித்து அழுகுது. 

ஹைவே விபத்தின் பின்னணியில் திகிலூட்டும் அரக்கன் !

அதோட கழுத்துல மிதிச்சு கொன்னுட்டு பொண்ணையும் சோழிய முடிக்குறாரு. புத்தி தெளிஞ்சதும் தான் செஞ்ச பயங்கரம் புரியுது. அதே போல தான் அந்த பூதம் இப்போ உங்க வீட்ல அந்த பாட்டில்ல வந்து உட்கார்ந்து இருக்குது. 

மது குடிப்பது மன சோர்வுக்கு நல்லதா? சிறுகதை !
ஒரு முறை நீங்கள் அதை டேஸ்ட் பண்ணினீங்கன்னா கண்டிப்பா கால சுத்தின பாம்பாட்டம் அது உங்கள் கூடவே சுத்திரும். அதே போல இன்னொரு விஷயம். 

நீங்க உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளுக்கு அல்லது பிச்சைக் காரராகவே இருந்தால் கூட கெட்டு அழுகி போன விஷயங்களை கொடுப்பீங்களா? மாட்டீங்க இல்லையா? நல்ல விஷயங்களைத் தான் கொடுப்பீங்க.

அதே போல நண்பர்களுக்கு தானமாக கொடுப்பதும் நல்ல விஷயமா குடுங்க.

களவும் கற்று மறக்கலாம்.

குடியை குடித்து விட்டு மறக்க முடியாதுங்க எஜமான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings