மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
ஷீரடி சாய்நகர்- சிஎஸ்எம்டி ரெயில் தானே இரவு 10:06க்கு வந்து 10:08க்கு புறப்படும்.
கல்யாண் நிலையத்தில் இந்த ரெயிலின் வருகை மற்றும் புறப்படும் நேரம் முறையே 9:45 மற்றும் 9:47 ஆகும். சிஎஸ்எம்டி- சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தானே ரெயில் நிலையத்திற்கு மாலை 4:33க்கு வந்து 4:35 க்கு புறப்படும். கல்யாண் மாலை 4:53க்கு சென்றடையும், 4:55க்கு புறப்படும் என்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
(getCard) #type=(post) #title=(You might Like)
இதே போல், சோலாப்பூர்- சிஎஸ்எம்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தானே நிலையத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்து 11:52 மணிக்கு புறப்படும்.
இந்நிலையில், சோதனை அடிப்படையில் தானே மற்றும் கல்யாணில் நிறுத்தங்கள் வழங்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Thanks for Your Comments