பெண்களை மிரட்டி படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்... அம்பலப்படுத்திய செய்தி சேனல் !

0

ரெய்டு வரும் என்று மிரட்டி பெண் அதிகாரிகள் உள்பட பல பெண்களை படுக்கைக்கு அழைத்ததாக மகாராஷ்டிர மாநில பாஜக துணை தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோக்களை செய்தி சேனல் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பெண்களை மிரட்டி படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்... அம்பலப்படுத்திய செய்தி சேனல் !
மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும். பாஜக முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். 

இந்நிலையில், அந்த மாநில பாஜகவின் துணைத் தலைவர் க்ரிதி சோமையாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

கீலாய்டு [Keloid] தழும்பு இது வேற !

மொத்தமாக 8 மணி நேரம் ஓடக்கூடிய 35 வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. 

அதில் பாஜக மாநில துணைத் தலைவர் சோமையா அரசு பெண் அதிகாரிகள் உள்பட பலரை மிரட்டி தன் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சிப்பது பதிவாகி யுள்ளது.

தன் ஆசைக்கு இணங்காதவர்களிடம் அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயமுறுத்துவதும் அம்பலமாகி யுள்ளது. 

பெண் அதிகாரிகள் மட்டுமின்றி, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் சோமையா இதே போல அச்சுறுத்தி தன் காம இச்சைக்கு இணங்க வைக்க பார்த்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுகிறது. 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் மகளிர் பிரிவு சோமையாவை உடனடியாக பாஜக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.

மும்பை போலீசார் இந்த ஆபாச வீடியோ விவகாரம் பற்றி விசாரணையைத் தொடங்கி யிருக்கிறது. எதிர்க் கட்சியினர் இந்த விவகாரத்தை சட்டப் பேரவையிலும் எழுப்பியதால், பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்கு உள்ளான வீடியோக்கள் குறித்து முழுமையாக விசாரணை நடைபெறும் என்றும் இந்த விவகாரத்தில் பாஜக யாரையும் காப்பாற்ற முயலவில்லை என்றும் தேவேந்திர பட்னவிஸ் உறுதி அளிக்கிறார். 

பெண்களை மிரட்டி படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்... அம்பலப்படுத்திய செய்தி சேனல் !
பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார் விசாரித்து கண்டுபிடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டி ருக்கிறார். இதனிடையே, ஆபாச வீடியோ விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் க்ரிதி சோமையா தேவேந்திர பட்னவிஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் தான் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவே இல்லை என்கிறார்! ஒரு மராத்தி சேனல் என்னுடைய வீடியோக்களை வெளியிட்டுள்ளது. 

அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள் !

என்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. அந்த வீடியோக்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் பெண்களிடம் ஏதும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings