ஆம்புலன்ஸில் மனுவுடன் வந்த பெண்ணை குறித்து அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் ஓடோடி வந்து நோயாளியின் மனுவை பெற்று நடவடிக்கை எடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நாகை மாவட்டம், கொட்டாரகுடியைச் சேர்ந்தவர் செல்வராணி. கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் செல்வராணியின் முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டது. இதனால் அவரால் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார்.
இந்நிலையில் நடக்க முடியாத தனது தாய்க்கு மூன்று சக்கர பேட்டரி வாகனம் வழங்க கோரி ஆம்புலன்ஸில் தனது தாயாரை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவரது மகள் இன்று அழைத்து வந்துள்ளார்.
இதயத்தில் பல்மனரி வால்வு அடைப்பு ஏற்பட்டால் என்னவாகும்?
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உடனடியாக தனது அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Thanks for Your Comments