மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா. இவரின் வயது 26. இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றி வந்தார்.
வேறு மதத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதை ஷ்ரத்தாவின் பெற்றோர் விரும்பவில்லை. இதனால் மகளின் காதலுக்கு அவர்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் காதலனுக்காக பெற்றோரை உதறித் தள்ளிய ஷ்ரத்தா மும்பையின் வாசி பகுதியில் அப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார்.
மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
வாட்டிய முட்டை சாண்ட்விச் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் செய்வது !
டெல்லிக்கு குடிபெயர்ந்த பின்னர் அங்குள்ள மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
டெல்லியில் பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் ஷ்ரத்தா பணியாற்றினார். காதலன் அப்தாப் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல் காரராக பணியாற்றினார்.
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.மேலும் அப்தாப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாப்பை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இதன் காரணமாக தினமும் இரவில் ஷ்ரத்தாவை அப்தாப் அடித்து துன்புறுத்தியுள்ளார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் வாழ்ந்ததால் தனது துயரத்தை குடும்பத்தினரிடம் ஷ்ரத்தா கூறவில்லை.
எனினும் மும்பையில் வசிக்கும் தனது பள்ளிப் பருவ நண்பர் லட்சுமணன் என்பவரிடம் ஷ்ரத்தா தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். தன் வாழ்வின் துயரங்களை அவருடன் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால் ஷ்ரத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஷ்ரத்தாவின் செல்போன் எண் அணைக்கப்பட்டு இருந்தது.
இதனை யடுத்து மகளை தேடி விகாஸ் மதன் நேரடியாக டெல்லி சென்றார். மகள் வசித்த வீட்டுக்கு சென்று பார்த்த போது அந்த வீடு பூட்டிக் கிடந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி மஹரவுலி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன் பின்னர் 06-அக்டோபர்- 2022 அன்று காவல்துறை விசாரணைக்கு அப்தாப் அழைக்கப் பட்டுள்ளார்.
அப்போது தனக்கும் ஷ்ரத்தாவுக்கும் இடையே உள்ள உறவு பற்றி எவ்வித தயக்கமும் இன்றி அவர் கூறியுள்ளார்.
சிறு சண்டையில் அவர் தங்களது டெல்லி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரை தடுத்து நிறுத்தாதது தனது தவறு தான் என்றும் காவல்துறையிடம் அப்தாப் கூறியுள்ளார்.
காணாமல் போன ஷ்ரத்தாவை கண்டுபிடிக்க தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக காவல் துறையினரிடம் உறுதியும் அளித்துள்ளார் அப்தாப்.
இதையடுத்து விசாரணைக்கு பின் அவரை காவல்துறை அனுப்பியுள்ளது. அப்போது தன் மீது எவ்வித சந்தேகமும் வராது என்று அப்தாப் உறுதியாக நம்பியுள்ளார்.
இந்த மாத (நவம்பர்) தொடக்கத்தில் இரண்டாவது கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அப்தாப் சில முரண்பாடான தகவல்களை வழங்கி யிருக்கிறார்.
ஆம்லெட் புளிக்குழம்பு செய்வது எப்படி?
எனினும் விசாரணை நிறைவுப் பெற்றதாகவும் அவர் மீது எவ்வித சந்தேகமும் இல்லை என்ற உணர்வை அப்தாப்பிற்கு காவல் துறையினர் ஏற்படுத்தி யுள்ளனர்.
பின்னர் வசை பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்ற அப்தாப் மது போதையில் அவர் செய்த குற்றம் குறித்து சில தகவல்களை கசிய விட்டிருக்கிறார்.
இறுதியில் டெல்லி போலீஸார் ஷ்ரத்தாவின் காதலன் அப்தாபை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
(nextPage)
காவல் துறையினரிடம் அப்தாப் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:
இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த மே 18-ம் தேதி இரவில் எங்களுக்குள் மிகப்பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது. நான் அவளை அடித்த போது கூக்குரலிட்டாள்.
இதனால் அவளது வாயையும் மூக்கையும் தலையணையால் நீண்ட நேரம் அழுத்தினேன். இதில் மூச்சுத் திணறி அவள் துடிதுடித்து உயிரிழந்தாள். யாருக்கும் தெரியாமல் கொலையை மறைக்க திட்டமிட்டேன்.
உடனடியாக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜை வாங்கினேன். நான் வேலை செய்யும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை எடுத்து வந்தேன்.
அந்த கத்திகள் மூலம் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும் கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினேன். ஒட்டு மொத்தமாக அவளது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தேன்.
வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க !
நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்தேன்.
தொடர்ச்சியாக 18 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியெறிந்தேன்.
அவற்றை நாய்கள் கவ்வி சென்று விட்டன. வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக நாள்தோறும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்தேன்.
யாருக்கும் என் மீது சந்தேகம் எழவில்லை.எனவே வழக்கம் போல பணிக்கு சென்று வந்தேன். பின் போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டேன்.ஆனாலும் போலீஸார் என்னை கைது செய்து விட்டனர்.
இந்த சீரியலின் கதாநாயகன் டெக்ஸ்டர் மோர்கன் போலீஸ் தடயவியல் நிபுணராக பணியாற்றுவார். அதேநேரம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கொலை செய்வார்.
குற்றவாளியை கொலை செய்த பிறகு உடலை பல துண்டுகளாக வெட்டி கடல் அல்லது கால்வாயில் வீசுவது கதாநாயகனின் வழக்கம். இந்த சீரியலை அப்தாப் விரும்பி பார்த்துள்ளான்.
அதை பார்த்தே ஷிரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி தடயத்தை அழித்ததாகவும் அப்தாப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
முடியின் வளர்ச்சிக்கு 5 விதமான காய்கறிகள் !
ஷ்ரத்தாவை கொன்ற பிறகு அவரது உடலின் 35 துண்டுகளை அப்தாப் அப்புறப்படுத்தியதாகக் கூறிய காட்டில் இருந்து 10-13 எலும்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். இன்னும் அவருடைய தலை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஷ்ரத்தாவை கொன்ற பிறகு அப்தாப் அவரது வங்கி கணக்கு செயலியை இயக்கி ரூ.54,000 பரிமாற்றம் செய்தார். அப்தாபின் பிளாட்டின் நிலுவையில் உள்ள ரூ. 300 தண்ணீர் கட்டணம், அவர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதை நிரூபித்தது.
அறிக்கைகளின் படி அதற்கு காரணம் என்னவென்றால் அப்தாப் ஷ்ரத்தாவின் உடலை குளியலறையில் வைத்து வெட்டியுள்ளான். அந்த சமயத்தில் அதிகப் படியான தண்ணீரை பயன்படுத்தியதால் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து பெண்ணின் உடல் பாகங்கள் எதுவும் கிடைத்ததா என்று விசாரணை செய்து வருகின்றனர். அதே போல் அப்தாப் கொலைக்கு பின்பும் மிகவும் சாதாரணமாக விசாரணையில் பேசுகிறான்.
அப்படி என்றால் இவனிடம் வேறு எதுவும் திட்டம் இருக்கிறதா?
தப்பிக்க ஏதாவது திட்டம் போட்டு இருக்கிறானா?
Thanks for Your Comments