பணத்தை வச்சு எல்லாத்தையும் வாங்கிவிட முடியுமா? மைக்கேல் ஜாக்சன் !

0

இந்த தலைமுறையில் உள்ள பெரும்பாலான மக்கள் காசு, பணம் தான் முக்கியம். சொந்த பந்தங்கள் தேவை இல்லை என்பதை போன்ற மனநிலையில் உள்ளனர். 

பணத்தை வச்சு எல்லாத்தையும் வாங்கிவிட முடியுமா? மைக்கேல் ஜாக்சன் !
காசு வந்துட்டா நமக்கு எல்லாமே கெடைச்சுரும் என்கிற மனப்பான்மையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த எண்ணம் சரியா, தவறா என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

மைக்கேல் ஜாக்சன் ஒரு மிகப்பெரிய டான்ஸர். இன்றுவரை அவரை போல நடனம் ஆடக்கூடிய ஒரு மனிதர் இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை. அவர்கிட்ட இல்லாத பணம் கிடையாது.

சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருந்தார். அவருக்கு ஒரு ஆசை இருந்தது. ரொம்ப நாட்கள் இந்த உலகில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

எப்படியாவது ஒரு 150 வயசு வரைக்கும் வாழணும் என்று ஆசைப் பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துள்ளது. 24 மணி நேரமும் அவரை கண்காணிக்க மருத்துவர்கள் அவர் கூடவே இருந்துள்ளனர். 

எப்போ என்ன பிரச்சனை வந்தாலும் உடனே அவருடைய சிறுநீரகத்தை மாற்றுவதற்கு மருத்துவக்குழு அவருடனே எப்பவும் பயணம் செய்துள்ளது. 

பணத்தை வச்சு எல்லாத்தையும் வாங்கிவிட முடியுமா? மைக்கேல் ஜாக்சன் !

மருத்துவர் எந்த உணவை அவருக்கு பரிந்துரைக்கிறாரோ அந்த உணவை தான் எப்பவும் மைக்கேல் ஜாக்சன் சாப்பிடுவார். இருந்தும் இவை அனைத்தும் அவருக்கு உதவவில்லை. 

தனது 50வது வயதில் இறந்து விட்டார். அவருடைய இறப்பு தற்கொலையா, கொலையா என்று பல கேள்விகள் எழுந்தாலும் இத்தனை கோடி சொத்துக்கள் வைத்திருந்தும் அந்த பணம் அவருக்கு உதவவில்லை. 

கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க ! #FootCracks

இதே போல எத்தனையோ பணக்காரர்கள் நீண்ட நாட்கள் இந்த உலகில் வாழ ஆசைப்பட்டும் அந்த பணம் அவர்களை கடைசி வரை காப்பாற்றவில்லை. 

இந்த உலகில் வாழும் வரை முடிந்த வரை பணத்தை விட நல்ல நண்பர்களை உறவுகளை சம்பாதிக்க வேண்டும், அதுதான் நம் சந்ததிக்கு கடைசி வரை கை கொடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings