நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தடுத்து அவருடைய 50 மற்றும் 51 வது படத்தின் அப்டேட்டுகள் வந்து விட்டன.
தனுஷை பொருத்தவரைக்கும் ஆரம்ப காலங்களில் ஏனோ தானோ என்று படங்களில் நடித்துக் கொண்டு இருந்தவர், தற்போது நிறைய சமூக பொறுப்புள்ள படங்களில் நடிப்பதோடு,
(getCard) #type=(post) #title=(You might Like)
பல விழா மேடைகளில் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யாத நடிகராகவும் தன்னை காட்டிக் கொள்கிறார்.
அறிவுரை எல்லாம் ஊருக்குத் தான் என்பது போல் தனுஷ் தற்போது குற்றாலத்தில் பயங்கரமாக ஆட்டம் போட்டு வருகிறாராம். கேப்டன் மில்லர் படம் முழுக்க முழுக்க திருநெல்வேலி, தென்காசி பகுதிகளை சுற்றி தான் எடுக்கப்பட்டு வருகிறது.
அவரோடு சீனியர் நடிகர்களான சிவராஜ்குமார் ,சந்திப் கிசான் ஆகியோரும் இணைந்து ஜாலியாக சுற்றி வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவு ஹோட்டலில் சென்று சாப்பிடுவது, ஊர் சுற்றுவது என பிசியாக இருக்கிறார்களாம்.
பகல் நேரத்திலேயே எந்த ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதை விசாரித்து இரவில் அந்த ஹோட்டலில் தான் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுகி றார்களாம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டல் என பொழுதை கழித்து வருகிறாராம் தனுஷ். மொத்தத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளம் தற்போது பிக்னிக் போல் இருக்கிறதாம்.
மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?
இப்போது தனுஷ் மற்றும் அவருடன் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் அடிக்கும் லூட்டி மொத்தத்தின் செலவையும் தயாரிப்பாளர் தலையில் தான் கட்டி யிருப்பார்கள். அந்த தயாரிப்பாளரின் நிலைமை தான் தற்போது ரொம்பவும் கஷ்டம்.
Thanks for Your Comments