தேங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் கொழுப்புச் சத்தும் நிறைந்திருக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதி இரவில் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று தவிர்க்கிறோம்.
நல்ல கொழுப்பாக இருக்கும் தேங்காய் எப்போது தீங்கு விளைவிக்கும் கொலஸ்டிராலாக மாறுமென்றால் தேங்காயை சமைப்பதற்காக சூடுபடுத்தும் போது தான் அது உடலில் கொலஸ்டிராலாக மாறும்.
தேங்காய் நல்ல கொழுப்பாகவே நம் உடலுக்குள் இருக்க தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரங்களில் ஆரோக்கியமற்ற கண்ட ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் தேங்காய் ஒரு துண்டு சாப்பிடலாம்.
ஆனால் நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.
மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.
அதோடு தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப் பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.
உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.
சுக்கின் மருத்துவ குணங்கள்
இரவு நேரத்தில் தேங்காய்ப் பாலில் சுக்குப் பொடி சேர்த்துக் கொள்வதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப் படியான வலி,
தொண்டையில் வலி, நெஞ்சு சளியால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஆஸ்டியோ பொராசிஸ் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
மஞ்சள்
மஞ்சளிலும் இஞ்சியைப் போல ஆன்டி- இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் அதிக அளவில் இருக்கின்றன. அதோடு மஞ்சளில் ஆன்டி- செப்டிக் தன்மைகள் அதிகம்.
பழங்காலம் தொட்டே மஞ்சள் உணவிலும் சருமத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மஞ்சள் மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது.
மிளகு
இருமல், சளி மற்றும் அதனால் ஏற்படும் தொண்டை வலியை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் உடலில் உள்ள கிருமித் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது.
Thanks for Your Comments