சரியும் லெஜண்ட் அண்ணாச்சியின் தொழில் சாம்ராஜ்யம் !

0

தமிழகத்திலேயே மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான். சென்னையின் ஒரு அடையாளமாகவே இது மாறி இருந்தது.

சரியும் லெஜண்ட் அண்ணாச்சியின் தொழில் சாம்ராஜ்யம் !
சரவணா ஸ்டோர்ஸ் கடைகளை பார்த்து தான் அடுத்தடுத்து தொழில் தொடங்குபவர்கள் அதே மாதிரி துணி வியாபாரம், பாத்திரம் வியாபாரம், நகை வியாபாரம் என ஆரம்பித்தார்கள். 

எத்தனை போட்டி வந்தாலும் இந்த கடை எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. சென்னையில் தியாகராஜ நகரில் ஆரம்பிக்கப்பட்ட தங்களுடைய தொழிலை இந்த நிறுவனம் சென்னை முழுக்க தொடங்கியதோடு, தமிழகம் முழுக்க ஆரம்பிக்கும் பிளானிலும் இருந்தது. 

இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

இந்த நிறுவனத்திற்கு என்று தனி பெயரே இருக்கிறது. தமிழகம் முழுக்க உள்ள மக்கள் இந்த ஒரு கடைக்காகவே சென்னை நோக்கி வந்திருக்கிறார்கள்.

அப்படி பேர் போன இந்த கடை சமீப காலமாக பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கரண்ட் பில் கட்டவில்லை என்றெல்லாம் ஒரு சில கிளைகளை மூடும் அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. 

முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் ஒரு கிளையை 300 கோடிக்கு விற்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் இந்த மிகப்பெரிய சரிவிற்கு காரணம் அதனுடைய ஓனர் லெஜன்ட் சரவணா தான். 

ஆரம்பத்தில் இருந்தே இந்த கடையின் விளம்பரங்களில் நடிப்பதற்கு மட்டும் முன்னணி நடிகைகள், மற்ற மொழி நடிகைகளை எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருந்தார் இவர்.

பின்னர் தானே விளம்பரப் படங்களில் நடித்துக் கொள்கிறேன் என்று களமிறங்கிய இவருக்கு ஹீரோ ஆசையும் வந்து விட்டது. ஹீரோவாக நடித்தே தீருவேன் என்று சொந்த பணத்தைப் போட்டு லெஜன்ட் படத்தை எடுத்தார். 

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டது. போட்ட பணத்தில் பாதியைக் கூட அவரால் எடுக்க முடியவில்லை.

சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?

தொழில் ரீதியாக சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமா மோகத்தினாலும், நடிகைகளின் மீதான ஆசையினாலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த இவர் தற்போது தான் ஆசையாக உருவாக்கிய கிளைகளை மூடும் அளவிற்கு கஷ்டத்தை சந்தித்திருக்கிறார். 

ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யமாக இருந்த சரவணா ஸ்டோர்ஸ் தற்போது சரியத் தொடங்கி விட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings