காசு வாங்கி கொண்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

0

நடிகர் டி.ஆர். சிலம்பரசன் மூன்று வாரங்களுக்குள் ரூ.1 கோடிக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என செவ்வாய்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.காசு வாங்கி கொண்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கி விட்டு நடிக்காமல் தள்ளிப் போட்டு வந்த நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திறமை வாய்ந்த நடிகரான சிம்பு சிக்காத சர்ச்சைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு இவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். 

சமீப காலமாக உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் நடித்து வந்த சிம்புவுக்கு தற்போது கொரோனா குமார் படத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல், சிம்புவை ஹீரோவாக வைத்து இயக்க இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். 2021 இல் கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது. 

அதற்கு முன் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் ஹிட்டானது. 

இதையடுத்து அவர் கொரோனா குமார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆனார். அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். 

இந்த நிலையில்,  ஒப்புக் கொள்ளப்பட்டபடி சிம்பு படத்தில் நடிக்க தயாராக இல்லை. இதனை யடுத்து வேல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வேல்ஸ் நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் எம்.சந்தானராமன், தயாரிப்பு நிறுவனம் ரூ.4.5 கோடியை சிம்புவுக்கு வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், ஜூலை 16, 2021 அன்று தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகருக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை ஆராய்ந்த நீதிபதி, கொரோனா குமாரில் நடிக்க சிம்புவுக்கு முன்பணமாக ரூ.1 கோடி மட்டுமே கொடுக்கப் பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

குரங்கை விழுங்கும் ராட்சத பல்லி வைரல் வீடியோ !

ரூ.4.5 கோடி கொடுக்கப் பட்டதாகக் குறிப்பிடப்பட வில்லை, என்று கூறினார். மேலும், மனுதாரர் சில வங்கி பரிவர்த்தனைகளை காண்பித்து, சிம்புவுக்கு கூடுதல் பணம் கொடுக்கப் பட்டதாகவும், 

காசு வாங்கி கொண்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மேலும் சில தொகை ரொக்கமாக கொடுக்கப் பட்டதாகவும் கூறினாலும், அந்த பணம் கொரோனா குமார் படத்திற்கு மட்டும் தானா என்று சந்தேகம் இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.

1996 ஆம் ஆண்டின் நடுவர் மற்றும் சமரசச் சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய மனுவின் நோட்டீஸைப் பெற்று, 

சிம்பு தனது வழக்கறிஞர் மூலம் ஆஜராகிய பின்னரே, பரிவர்த்தனைகள் பற்றிய தெளிவான தகவல் வெளிவரும் என்று நீதிபதி கூறினார்.

பாம்பு போல வளர்ந்த கற்றாழை.. அதிர்ச்சியில் உறைந் கிராம மக்கள் !

இதனைத் தொடர்ந்து, சிம்பு ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை வழங்குமாறு உத்தரவிட்டு, இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால் செப்டம்பர் 19 ஆம் தேதி அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings