தென் தமிழகத்தில் சில பாட்டிமார்களின் காது தோள்பட்டை வரைக்கும் தொங்கிப் போயிருப்பதை காண முடியும்.
நம்முடைய தமிழக பொற்கொல்லர்களின் தலைசிறந்த படைப்பு என்னவென்று கேட்டால், மதுரை பக்கம் அந்த கால பெண்கள் அணிந்த தண்டட்டியை என்று சொல்லலாம்.
தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக் கூடிய காதணி வகைகளுள் வரும். வசதியுள்ளவர்கள் தங்கத்தில் செய்து போடுவார்கள். நடுத்தர மக்கள் வெண்கலத்தாலானதை அணிவார்கள்.
குப்புற படுத்து தூங்குவது தவறா தெரியுமா?
எதில் செய்யப் பட்டதாக இருந்தாலும் வெயிட் கூடுதலாகவே இருக்கும். தென்னிந்திய பண்பாட்டில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டகளில், அந்த கால பெண்களிடம் தண்டட்டி அணியும் பழக்கம் இருந்தது.
இன்றைக்கு தங்க நகை செய்ய எத்தனையோ இயந்திரங்கள் வந்தாலும், நவீன இயந்தரங்களின் துணை கொண்டும் காப்பி அடிக்க முடியாத ஒரு அரிய வகை நகை தண்டட்டி ஆகும்.
இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இதை செய்பவர்கள் இருக்கிறார்கள். இந்தக் காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டி யிருக்கும். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர்.
இப்போ காது குத்தும் பழக்கம் இருப்பது போல அந்தக் காலத்தில் காது வளர்க்கும் பழக்கம் இருந்தது. காது துளையிட வரும் ஆசாரிக்கு, பருப்பு சோறு சமைத்துப் போட்டு துணிமணி எடுத்துக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
உலகம் அழிய இது நடந்தால் சர்வ நாசம் தான் !
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள இரகசிய அறையில், அரசன் ராஜராஜசோழன் நீண்ட காது வளர்த்தது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
பாம்படம் அழகின் அடையாளம் அல்ல அந்தஸ்தின் அடையாளம். பாம்படங்களில் இருந்த மவுசு காரணமாக அதை வடிக்கவே சில பொற்கொல்லா்கள் பரம்பரை பரம்பரையாக இருந்தாா்கள்.
பாம்படங்கள் கொப்பு, முருக்கச்சி, ஓணப்பு தட்டு, எதிா்தட்டு, குறுக்கு தட்டு, தண்டட்டி, முடிச்சு, நாகவட்டம் போன்றவற்றை உடல் வாகுக்கு தக்கவாறும் காதின் உறுதிக்கும் ஏற்றவாறு அணிந்து வந்தனா்.
கராச்சி அல்வா செய்வது எப்படி?
பாம்படம் தொங்கும் நீளத்தை வைத்து தான் செல்வ செழிப்பை அளப்பாா்கள். சிலருக்கு பாம்படம் தோள் வரை தொங்கும் சிலருக்கு மாா்பையும் வருடும். பாம்படம் போடுவதற்கு குறவா்கள் வந்து காதை, கத்தியால் கிழித்து துளை போட்டு காதை வடிப்பாா்கள்.
Thanks for Your Comments