நடைமேடையில் பேருந்தை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள் !

0

நாளுக்கு நாள் அரசு பேருந்து, தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நடைமேடையில் பேருந்தை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள் !
பல இடங்களில் விபத்துக்களும், மோதல்களும் கூட ஏற்பட்டிருக்கிறது, அந்த வகையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.25 மற்றும் 4.35 மணிக்கு புதுக்கோட்டையை நோக்கி செல்ல இரு தனியார் பேருந்துகளும், 4.40 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்ல குளிர்சாதன பேருந்து (AC) இயக்கப் படுகிறது. பயணிகள் அதிகம் அரசு பேருந்து பயணத்தையே விரும்பி ஏறுகின்றனர்.

இதனால் தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிப்பது குறைந்து வரும் நிலையில், பயணிகள் அரசு பேருந்தில் ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 

தனியார் பேருந்து உரிமையாளர் மணிகண்டன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த அரசு பேருந்து நேர காப்பாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த தனியார் பேருந்து உரிமையாளர் மணிகண்டன், தனியார் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பின்னோக்கி நகர்த்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறையை இடித்து தள்ளக் கூறினார். 

அதை தொடர்ந்து ஓட்டுநர் ராஜ்குமாரும் பேருந்தை வேகமாக பின்னோக்கி இயக்கி நடைமேடையை சேதப்படுத்தி நேரக் காப்பாளர் அறையை இடிக்க முயன்றார்.

அப்போது நேரக் காப்பாளர் அறையில் இருந்து வெளியே வந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் கருப்பையாவை இடித்து கொலை செய்யும் நோக்கில் மீண்டும் தனியார் பேருந்து ஓட்டுநர் 

பின்னோக்கி வேகமாக நடைமேடை மீது மோதியதால் உள்ளே இருந்த பயணிகள் அலறியதால் அந்த இடத்தில பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து கருப்பையா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

புகாரின் பேரில், நடைமேடையில் பின்னோக்கி வேகமாக இயக்கி இடித்த தனியார் பேருந்தை பறிமுதல் செய்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர், 

பேருந்தின் உரிமையாளர் மணிகண்டன், ஒட்டுநர் ராஜ்குமார், மற்றும் நடத்துனர் பாண்டி ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?

செக்கிங் இன்ஸ்பெக்டர் கருப்பையா வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டதால் சுதாரித்துக் கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் மணிகண்டன் காவல் நிலையத்தில் இருந்து தப்பி தலைமறைவானார். 

இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings