நடிகர் சந்தானம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனக்கும் நயன்தாராவுக்கும் உள்ளது அண்ணன் தங்கை உறவு என்று கூறியுள்ளார்.
சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சந்தானம், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் நயன்தாராவுடன் உள்ள உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் வல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்து
இஸ்ரேல் உருவானது இப்படித் தான்.. ஒரு ஆய்வு பார்வை !
நயன்தாராவை தனக்கு நன்றாக தெரியும் என்று எனக்கும் அவருக்கும் உள்ளது அண்ணன் தங்கை உறவு என்றும் சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு தங்கை என்றும் கூறினார்.
அவருடைய இரண்டு குழந்தைகளை தான் வாழ்த்தியதாகவும் தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போது தான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று காமெடியாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments