கே.ஜி.எப் -ல் கூறும் El-Dorado பற்றி ஏதாவது தெரியுமா?

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான கே.ஜி.எப். படத்தில் அடிக்கடி El-Dorado என்கிற வார்த்தையை உபயோகிப்பார்கள். El-Dorado விற்கு இணையானது இந்த கே.ஜி.எப்.

கே.ஜி.எப் -ல் கூறும் El-Dorado பற்றி ஏதாவது தெரியுமா?

தங்க சுரங்கம் என்றும், இந்தியாவின் El-Dorado தான் இந்த கே.ஜி.எப் என்றும் சொல்வார்கள். உண்மையில் படம் பார்த்த நிறைய பேருக்கு அது என்ன El-Dorado என்று நிச்சயம் யோசித்திருப்பார்கள். 

1531ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Juan Martinez என்னும் கப்பல் கேப்டன் தன்னுடைய மரண படுக்கையில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டு இறந்து விட்டார். 

இதுவரை இந்த உலகில் யாரும் பார்த்திராத அளவுக்கு தங்கம் இருப்பதாகவும், அந்த இடத்தின் பெயர் தான் El-Dorado என்றும், தற்போது அமேசான் காடுகள் உள்ள பகுதியில் தான் அந்த நகரம் இருக்கிறது என்றும் சொல்லி விட்டு இறந்து விட்டார்.

Juan Martinez ஒரு முறை அமேசான் பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். 

(getCard) #type=(post) #title=(You might Like)

அப்போது அங்கு வாழ்ந்த ஆதிவாசி மக்கள் இவரை காப்பாற்றி கிட்டத்தட்ட 15 நாட்கள் இவரின் கண்களை மூடி வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அந்த இடம் தான் முழுக்க முழுக்க தங்கத்தால் நிரம்பி வழிந்த El-Dorado. அந்த El-dorado பகுதியில் ஒரு ஏரி முழுக்க தங்கத்தால் நிரம்பி வழிந்துள்ளது.

El-dorado பகுதியில் இருந்த மணல் கூட தங்கமாகத் தான் இருந்துள்ளது. இந்த இடத்தை ஆட்சி செய்து வந்த மன்னரின் உடல் முழுவதும் தங்க முலாம் பூசி இருந்துள்ளது. இப்பேற்பட்ட இடம் ஆதிவாசிகளின் கையில் இருந்ததை கண்டு Juan Martinez வியந்து விட்டார். 

Juan Martinez உடல் நிலை சரியானவுடன் மீண்டும் அவரின் கண்களை மூடி 15 நாட்கள் பயணம் செய்ய வைத்து மீண்டும் அந்த ஆற்றங்கரையின் ஓரத்திலேயே ஆதிவாசிகள் அவரை வெளியேற்றி விட்டனர்.

கே.ஜி.எப் -ல் கூறும் El-Dorado பற்றி ஏதாவது தெரியுமா?

Juan Martinez மற்றும் அவருடைய 3 நண்பர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்கள் மீண்டும் அங்கு சென்று El-dorado இருக்கும் இடத்தை தேடியுள்ளனர். Juan Martinez மட்டுமல்ல இதுவரை யாராலும் El-dorado உள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 

சமீபகாலமாக பல அகழ்வா ராய்ச்சிகளை விஞ்ஞானிகள் இந்த அமேசான் காட்டில் செய்த போதும் பல ஏரிகள் மூடப்பட்டிருப்பதை கண்டு பிடித்துள்ளனர். 

காலை உணவை தவிர்த்தால் இருதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு !

ஆனால் இந்த El-Dorado நகரத்தை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அமேசான் காட்டில் பல மர்மங்கள் நிறைந்திருப்பது நம்ம எல்லோருக்கும் தெரியும். 

அதே போல இந்த தங்க நகரமும் அங்க தான் மர்மமாக இப்போது வரை புதைந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings