ஈவ் டீசிங் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது… உச்சநீதிமன்றம் !

0

ஈவ் டீசிங், விபச்சாரி, இல்லத்தரசி, விபச்சாரம், பாஸ்டர்ட் போன்ற பல வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஈவ் டீசிங் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது… உச்சநீதிமன்றம் !
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இனிமேல் பயன்படுத்தப் படக்கூடாத வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் பட்டிய லிட்டுள்ளது. எனவே, இனிமேல் இந்த சொற்கள், சட்ட சொற்களஞ்சி யத்திலிருந்து வெளியேற்றப்படும். 

இந்த வார்த்தைகளுக்கு பதிலாக எந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முழுமையான கையேட்டை உச்சநீதிமன்றம்  வெளியிட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த கையேட்டை வெளியிட்டார். கையேட்டை வெளியிட்ட தலைமை நீதிபதி, இந்த கையேடு நீதிபதிகள் மற்றும் சட்ட சமூகம் வழக்கு விவாதங்கள், 

தீர்ப்புகளில் பெண்களைப் பற்றிய ஸ்டீரியோடைப் வார்த்தைகளை  அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், மாற்றவும் உதவும் எனக் கூறினார்.

பெண்களைப் பற்றிய தேவையில்லாத வார்த்தைகளை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், எதிர்க்கவும் நீதிபதிகள் மற்றும் சட்டத்துறை உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிப்பதே பாலின ஸ்டீரியோ டைப்களை எதிர்த்துப் போராடுவதற்கான கையேட்டின் நோக்கம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இதன் மூலம் கடந்த காலங்களில் வெளியான தீர்ப்புகளை விமர்சனம் செய்வதோ அல்லது தப்பர்த்தம் கற்பிப்பதோ தங்களின் நோக்கம் இல்லை என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கையேடு நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர் களுக்கும் மிகவும் உதவியானதாக இருக்கும் என்றும், தங்கள் மூலம் சமமான, சரியான நீதி பெற்றுத்தந் திருக்கிறது என்பதை தாங்கள் உறுதி செய்து கொள்வதற்கும் உதவும் என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !

30 பக்கங்கள் கொண்ட கையேடு புத்தகத்தில் முக்கியமான பிரச்சினைகள், குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான சட்டக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. 

தடை செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு பதிலாக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி யுள்ளது.

விபச்சாரம், விபச்சாரி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட கையேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.  

கள்ளக்காதலி என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தாமல், ஒரு ஆணுடன் காதல் அல்லது திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்ட ஒரு பெண் என்ற சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டும்.

ஈவ் டீசிங் என்ற சொல் இனி பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல் என்று அழைக்கப்படவேண்டும். Gay என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஒரு நபரின் பாலியல் நோக்கு நிலையை மிகவும் துல்லியமாக விவரிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும்.

House Wife என்ற சொல்லுக்குப் பதிலாக, சட்ட விவாதங்களில், ஹோம் மேக்கர் என்று பயன்படுத்தப்பட வேண்டும்.

முறையில்லாமல் பிறந்த குழந்தை என்ற வார்த்தைக்கு பதிலாக, திருமணத் தொடர்பைத் தாண்டி பிறந்த குழந்தை அல்லது, திருமணம் ஆகாத பெற்றோர்களுக்கு 

தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி?

பிறந்த குழந்தை என்ற வார்த்தையை இனிமேல் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் இது போன்ற வார்த்தைகள் அடங்கிய 30 பக்கங்களை கொண்ட கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings