நத்தைகளை சாப்பிடும் பிரான்ஸ் மக்கள்…. சுவாரஸ்ய தகவல்கள் !

0

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் வலுவான செல்வாக்கு கொண்ட ஒரு நாடு பிரான்ஸ். இதன் மொத்த பரப்பளவு 6,43,801 சதுர கிலோ மீட்டர்கள். 

நத்தைகளை சாப்பிடும் பிரான்ஸ் மக்கள்…. சுவாரஸ்ய தகவல்கள் !
பிரான்ஸின் தலைநகரம் பாரிஸ். இங்குள்ள அலுவலக மொழி பிரெஞ்சு. 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள் தொகை 67,413,000. பிரான்ஸில் மூன்றில் ஒரு பங்கு காடு உள்ளது. 

அதாவது இங்குள்ள நிலத்தில் 31 சதவிகிதம் காடுகள் உள்ளது. பிரான்ஸ் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம். 2018ம் ஆண்டில் 89.300.000 மக்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.

பிரான்சில் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் மிகவும் பெரியது. 

இங்குள்ள ஒவ்வொரு கலைப் பகுதியையும் 30 வினாடிகள் அளவில் பார்த்தால் முழு அருங்காட்சி யகத்தையும் பார்க்க சுமார் 100 நாட்கள் ஆகும். அப்படி என்றால் எந்த அளவிற்கு பெரியது என பார்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் 3 கப் டீ குடிச்சா.. இடுப்பளவை குறைக்கலாம் !

பிரஞ்சு கலைஞர்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலைப் படைப்புகளில் 66 சதவிகிதத்தை உருவாக்கி யுள்ளார்கள். 

லூவ்ரே அருங்காட்சி யகத்தில் உள்ள மிகவும் பிரபலமான கலைப்ப டைப்புகளில் மோனாலிசா (The Mona Lisa), மெதுசாவின் ராஃப்ட் (The Raft of the Medusa), வீனஸ் டி மிலோ (The Venus de Milo), தி ஹார்ஸ் டேமர்ஸ் (The Horse Tamers), கானாவில் திருமணம் (The Wedding at Cana) ஆகியவை அடங்கும். 

லூவ்ரே அருங்காட்சியகம் அருங்காட்சியகமாக மாறுவதற்கு முன்பு ஒரு கோட்டையாக இருந்தது. இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் அரச அரண்மனையாக புதுப்பிக்கப் பட்டது.

பிரெஞ்சுக் காரர்களுக்கு நத்தைகள் மிகவும் பிடித்த ஒரு உணவு வகை. பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் 25,000 டன் நத்தைகளை சாப்பிடுகிறார்கள். 

சராசரியாக ஒரு நபர் ஆண்டிற்கு சுமார் 500 நத்தைகளை சாப்பிடுகிறார். பிரான்ஸ் மக்கள் நத்தைகளின் சுவைக்கு அடிமைகள். 

விடுமுறை நாட்களில் பொதுவாக எல்லா வீடுகளிலும் நத்தை உணவு சமைக்கப்படும். பிரான்சில் நத்தைகள் எஸ்கார்கோட் (escargot) என்று குறிப்பிடப் படுகின்றன.

நத்தைகளை சாப்பிடும் பிரான்ஸ் மக்கள்…. சுவாரஸ்ய தகவல்கள் !

அதிலும் மிகவும் ஸ்பெஷலாக இந்த நத்தைகள் வெள்ளைப் பூண்டு மற்றும் வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடுவது இங்கு மிகவும் பிரபலமான ஒன்று. 

இந்த நத்தைகளின் ஓட்டை உடைத்து சாப்பிடும் வகையில் குழிந்த வித்தியாசமான பாத்திரத்தில் வைத்து கொடுக்கிறார்கள். இந்த நத்தைகள் சாப்பிடுவதற்கும் அப்படி ஒரு சுவையாக இருக்குமாம். 

இதை அங்குள்ள மக்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவார்களாம். பிரான்சில் சுமார் 1500 வகையான சீஸ் வகைகளை உற்பத்தி செய்கிறார்களாம். 

பாலாடைக் கட்டிகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் பிரான்ஸும் உள்ளது. பிரான்சின் மக்கள் தொகையில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சீஸ் சாப்பிடுகிறார்கள்.

கடைகளில் உணவுகள் பயன்படுத்தும் நாள்கள் தாண்டினால் அதை தூக்கி குப்பையில் எறிந்து விடுவார்கள். ஆனால் பிரான்ஸிலுள்ள கடைகள் இப்படி செய்ய முடியாது. 

பிரான்சில் உள்ள கடைகள் உணவுப் பொருட்கள் காலாவதி ஆவதற்கு முன்பு அந்த உணவை உணவுகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு, உணவு வங்கிகளுக்கு கொடுக்க வேண்டும். 

டை அடிப்பதற்கும் ஹேர் கலரிங்செய்வதற்கும் உள்ள வித்தியாசம்?

உணவு வீணாவதை தடுக்க இந்த சட்டத்தை பிரான்ஸ் 2016ம் ஆண்டில் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஆண்டுதோறும் இப்படி சுமார் 40 ஆயிரம் பவுண்டுகள் உணவை நன்கொடையாக கொடுக்கிறது. 

இப்படி நன்கொடையாக கொடுக்க படாவிட்டால் இந்த உணவுகள் அனைத்தும் வீணாகக் குப்பையில் சேர்ந்து விடும். இப்படி கொடுப்பதன் மூலமாக பிரான்சில் ஏராளமான மக்களுக்கு சாப்பிட இலவச உணவு கிடைக்கிறது.

டூர் டி பிரான்ஸ் எனப்படும் பிரபலமான சைக்கிள் பந்தயம் பிரான்சில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

நத்தைகளை சாப்பிடும் பிரான்ஸ் மக்கள்…. சுவாரஸ்ய தகவல்கள் !

மிகவும் புகழ்பெற்ற இந்த சைக்கிள் ஓட்டும் பந்தயம் 1903 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம் மொத்தம் இருபத்தி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பந்தய தூரம் மொத்தம் 3383 கிலோ மீட்டர்கள்.

பிரெஞ்சுக் காரர்கள் ஒவ்வொரு வருடமும் 11 மில்லியன் குவளை ஒயினை அருந்துகிறார்கள். உலகில் அதிக அளவு ஒயின் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

ஏழு விஷயம் பொய்யின்னா உங்க வாழ்க்கை கஷ்டம் தான் !

பிரஞ்சுக் காரர்கள் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் ஹெக்டோ லிட்டர்கள் ஒயினை உட்கொள்கிறார்கள். ஒயின் உட்கொள்வது மட்டுமல்லாமல் உலகின் மிக விலையுயர்ந்த ஒயினை தயாரிப்பதிலும் பிரான்ஸ் முன்னணியில் உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings