முடியும் எனில் முடியும் முடியாது எனில் முடியாது !

0

இரண்டு சிறுவர்கள் ஊருக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு வயது ஆறு, இன்னொருவனுக்கு பத்து. இருவரும் விளையாடிக் கொண்டே ஊரின் கடைசியில் இருக்கும் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். 

முடியும் எனில் முடியும் முடியாது எனில் முடியாது !
பத்து வயதுச் சிறுவன் ஆற்றில் இறங்கி நீந்தத் தொடங்க, திடீரென ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டான். காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று அலற, ஆறு வயதுச் சிறுவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

(getCard) #type=(post) #title=(You might Like)

அங்கும் இங்கும் தேடினான். நீளமான ஒரு கயிறு தூரத்தில் கிடப்பதைப் பார்த்தான். அதை எடுத்து வந்து ஆற்றில் விசினான். அந்தக் கயிறு ஆற்றில் தத்தளித்தவனின் கையில் சிக்கியது. 

கயிற்றின் இன்னொரு முனையை அருகில் உள்ள மரத்தில் கட்டி, முடிந்த மட்டும் இழுக்க, நண்பன் கரைக்கு வந்து சேர்ந்தான்.

நடந்த விஷயம் பற்றி ஊர் மக்களிடம் சொன்னார்கள். அவர்களுக்கு வியப்பு. ஆறு வயது சிறுவன் பத்து வயது சிறுவனைக் காப்பாற்ற முடியுமா..? ஊர்ப் பெரியவர் சொன்னார்...

முடியும். காரணம், அவனால் அதைச் செய்ய முடியாது என்று அவனிடம் யாரும் சொல்லவில்லை. இது தான் நம் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. 

நம் குழந்தைகளிடம் நாம் சொல்லும் பல விஷயங்கள் எதிர்மறையாகவே உள்ளன. அதைச் செய்யாதே... இது உன்னால் முடியாது... 

அதெல்லாம் நடக்காது... அது உனக்கு கிடைக்காது...  என்று நாம் சொல்லச் சொல்ல அது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து அவன் வாழ்க்கை பத்தோடு பதினொன்றாக ஆகிறதே தவிர அவன் ஆயிரத்தில் ஒருவனாக மாறுவதில்லை.

வெற்றியாளர்கள் தங்களிடம் உள்ள எதிர் மறையான எண்ணத்தை நீக்கி தன்னால் எது முடியும் எது முடியாது என்பதைத் தவறு செய்தாவது கற்றுக் கொண்டு ஜெயிக்கிறார்கள். 

காக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்? தெரியாத பதில் !

படிப்பு காதல் தொழில் என எதில் வேண்டுமானாலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று எவர் உழைக்கிறாரோ அது அவர் வசப்படுகிறது. முடியும் எனில் முடியும் முடியாது எனில் முடியாது!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings