மெத்தனாலில் இயங்கும் இன்னோவா கார்.. களமிறக்கும் டொயோட்டா !

0

இந்திய கார் சந்தையில் சில கார்களுக்குத் தான் எவர்கிரீன் டிமாண்ட் இருக்கும். அப்படிப்பட்ட கார்களில் டொயோட்டா இன்னோவா கஸ்டமர் சாய்ஸ் காராக இருக்கிறது. 

மெத்தனாலில் இயங்கும் இன்னோவா கார்.. களமிறக்கும் டொயோட்டா !
அப்படி மக்களின் மனம் கவர்ந்த இன்னோவா இப்போது அடுத்த தலைமுறை வெர்ஷனாக, கொஞ்சம் கூட சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாத, வகையில் எத்தனாலில் வெளிவர இருக்கிறது. 

அந்த வெர்ஷனை இன்று அறிமுகம் செய்கிறது டொயோட்டா நிறுவனம். இந்த கார் மாடலின் எத்தனால் வெர்ஷனையும் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது,

வெறும் துண்டு மட்டும் தான்.. சோபியாவின் கிரங்கடிக்கும் போஸ் !

சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. 

அந்த வகையி்ல் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப் பட்டது தான் இ-100, அதாவது முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள்.

இ20 ரக பெட்ரோலில் (20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளில்) இயங்கும் வாகனங்கள் விற்பனைக்கு வந்து விட்ட நிலையில், 

அடுத்து இ100 ரக (முழுமையாக எத்தனாலில் மட்டும் இயங்கும்) வாகனங்களையும் உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

அதன் முதல் படி தான் இன்னோவா இ-100 காரின் அறிமுகம். இந்த காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

இதுவே உலகின் முதல் பிஎஸ்VI (ஸ்டேஜ் 2) முழுமையாக எத்தனாலில் இயங்கும் கார் மாடலாகும். மின்சார வாகனம், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனம் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகின்றது. 

இந்த நிலையிலேயே 100 சதவீதம் எத்தனாலின் வாகனங்களை புரமோட் செய்யும் பணியிலும் அரசு களமிறங்கி இருக்கின்றது.

கடந்த ஆண்டு இதே போல் ஓர் புதுமையான வாகனத்தை டொயோட்மா நிறுவனம் அறிமுகம் செய்தது. அது ஹைட்ரஜன் ஃப்யூவலில் இயங்கக் கூடிய மிராய் கார் தான். 

ஹைட்ரஜன் ஃப்யூவலில் இயங்கக் கூடிய இந்த கார் கொஞ்சம் கூட மாசை வெளிப்படுத்தாது. 

மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி?

அதாவது கார்பன் உள்ளிட்ட மாசுவிற்குப் பதிலாக டொயோட்டா மிராய் அதன் எக்சாஸ்ட் வாயிலாக நீராவியையே வெளியேற்றும். இது சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

இந்த வாகனத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நிலையில் அடுத்ததாக 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் வாகனத்தை அறிமுகம் செய்யும் பணியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது.

இவை எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் இப்போது வரை வெளியிடப்பட வில்லை. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings