காவாலா பாடல் காப்பியா? பாடல் வரிகள் பற்றிய கருத்து என்ன?

0

இந்தப் படத்தின் முதல் பாடலான காவாலா இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

காவாலா பாடல் காப்பியா? பாடல் வரிகள் பற்றிய கருத்து என்ன?
இந்தப் பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது. ஆனால் பாட்டு புரியணும்ல. காவாலா, போவாளான்னு இருந்தால் என்ன புரியும்?

அனிருத் தன்னுடைய பாடல்களை ஹிட்டாக செமையான ஒரு டிரிக்கை கடைப்பிடிக்கிறார். அது தான் சோஷியல் மீடியாவில் அந்த பாடலை டிரெண்ட் செய்வது. 

அந்த படத்தில் வரும் ஹீரோவையோ, டைரக்டரையோ வைத்து காமெடியாக வீடியோ எடுத்து போடுவது அல்லது அவர்கள் அந்த பாடலை ரெக்கார்ட் செய்த விதத்தை வீடியோவாக போடுவது 

இல்லை யென்றால் அந்த பாடலுக்கு இன்ஸ்டா பிரபலங்களை ஆட விடுவது என்று கையில் வித்தைகள் நிறைய வைச்சிருக்கார். இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கிளிக் ஆகும்.

அரபிக் குத்து தான் உதாரணம். பட்டி தொட்டியில் இருந்து எல்லோரும் ரீல்ஸ் பண்ணி போட்டாங்களா?

அதே மாதிரி இந்த பாட்டுக்கும் பிரமோஷன் செய்ய ஒரு வீடியோ போட்டார். அதில் நெல்சன் சொல்லுவார் அனிருத்திடம், தெலுங்கு 70% தமிழ் 30% கலந்து ஒரு பாடலை எழுத வேண்டும் என்று.

பாதி மியூசிக்கிலேயே போயிடுது வர மீதி வரியும் தெலுங்கு மாதிரி இருக்கு. தமிழ் இனி மெல்லமாலாம் சாகாது உடனுக்குடன் மரணம் தான்.

காவாலா பாடல் காப்பியா? பாடல் வரிகள் பற்றிய கருத்து என்ன?

இதுக்கு நடுவில் பாட்டா முக்கியம் தமன்னாவை பாருங்க என்று ஒரு கூட்டம். இதில் கொடுமை என்னவென்றால், பக்கத்தில் ஆடிய ரஜினியை ஒருத்தனும் கண்டுகலை. 

அடப்பாவிங்களா! பாவம்யா அந்த மனுஷன் 70 வயசுல கஷ்டப்பட்டு ஆடிக்கிட்டிருக்கார். அதுக்காவது மரியாதை கொடுக்கலாம்ல. ஹிஹி.

இதுல ரஜினிக்கு ராவை வைத்து பாடினால் தான் சென்டிமெண்டாம் வேறு. இந்நிலையில் எப்போதும் போல் இப்பாடல் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. 

சத்தான வெள்ளரிக்காய் தால் செய்வது எப்படி?

அந்த வரிசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றானர். அத்துடன் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.

யாராவது விஜயினுடைய பாடல் கேட்டிங்களா? நான் ரெடி தான் வரவா என்று தொடங்கும் பாடல். இந்த பாடலை சில பேர் எதிர்த்து குரல் கொடுத்தார்கள். அப்போ எனக்கு புரியவில்லை. 

எதுக்கு விஜய் படம் வந்தாலே எதிர்ப்பு கிளம்புது என்று நினைத்தேன். அப்பறம் பாட்டை கேட்டதும் தான் தெரியுது. அந்த பாடலில் தெளிவாக கஞ்சாவை பற்றிய வரிகள் இருக்கும். 
காவாலா பாடல் காப்பியா? பாடல் வரிகள் பற்றிய கருத்து என்ன?
இழுத்து விட்டா கிக்கு, புகையிலை போன்ற வார்த்தைகள்.இவருடைய படத்தை பார்க்கும் இளைய சமுதாயம் என்ன பண்ணும்னு நினைக்கிறீங்க?கஞ்சா பயன்படுத்துவது தப்பில்லைங்குற மாதிரி நினைக்க மாட்டார்களா? 

இதை போன்ற விஷயங்களை க்ளோரிபை பண்ணுவது போல இருக்கிறது. இந்த காலத்திலும் பழைய பாடல்களை கேட்டு பாருங்க. காலத்துக்கும் அழியாத தத்துவங்களை சொல்லும். 
வாட்டிய முட்டை சாண்ட்விச் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் செய்வது !
அப்படி பாடல்கள் மூலம் கருத்துகளை சொல்லி மக்களை நல்வழிப் படுத்தியது போய் இப்போ பாடல்கள் தான் இளைய சமூகத்தை கெடுக்கும்படி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings