உலக பணக்காரர் பட்டியல் மற்றும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஏறக்குறைய பெரும்பாலானோர் இதற்கு சரியான பதிலை கொடுத்து விடுவீர்கள் என நினைக்கிறேன். சரி, அதுவே இந்தியாவில் யார் அதிகமாக வருமான வரி கட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
பலரும் அம்பானி –அதானி, டாடா-பிர்லா என்ற வழக்கமான பதிலை தான் நிச்சியம் கூறுவீர்கள். ஆனால் இவர்கள் யாரும் இல்லை என கூறினால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
சாலையில் உள்ள ரோடு ரிப்ளெக்டர் எப்படி செயல்படுகின்றன?
அப்படி யென்றால், இந்தியாவிலேயே அதிக வருமான வரியை கட்டும் அந்த நபர் யாராக இருக்கக் கூடும்?
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 முடிவடையவுள்ள நிலையில், இதுவரை ஆறு கோடி பேருக்கும் மேல் இந்த ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை ஞாயிறன்று கூறியுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை மாலை வரையில் 27 லட்சம் பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இப்போதுதான் மனதின் ஓரத்தில் அந்த கேள்வி உங்களை துளைக்கும்.
(nextPage)
நம் நாட்டிற்காக அதிகமான வருமான வரியை கட்டும் அந்த நபர் யார்?
சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் இந்தியாவில் அதிக வருமான வரி கட்டும் நபர்.
வருமான வரித்துறை கொடுத்துள்ள விவரங்களின் படி, கடந்த ஆண்டு, அதாவது 2021-22 நிதியாண்டில், அதிக வருமான வரி கட்டிய நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் அக்ஷய் குமார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
2022-ம் ஆண்டில் மட்டும் வருமான வரியாக 29.5 கோடி ரூபாயை இவர் செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 486 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான அக்ஷய் குமார், இந்தியாவில் அதிம சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். வருடத்திற்கு 4 அல்லது 5 படங்கள் வரை நடிக்கிறார்.
அது மட்டுமின்றி இவருக்குச் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனமும் விளையாட்டு அணியும் கூட உள்ளது. மேலும் பல விளம்பரங்களில் நடிப்பதின் மூலமும் வருமானம் ஈட்டுகிறார்.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழும். ஏன் அதிக வருமான வரி கட்டுபவர்களின் பட்டியலில் இந்திய பணக்காரர்கள் இல்லை என தோன்றலாம்.
டிஜிட்டல் திருட்டில் இருந்து நம்முடைய பணத்தைப் பாதுகாப்பது எப்படி?
தொழிலதிபர்களுக்கு அவர்களின் பேரில் தனியாக சொத்து இருக்காது. அனைத்து சொத்துகளும் அவர்களின் நிறுவனத்தின் பேரில் தான் இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் தான் அவர்கள் ஈட்டும் வருமானமும் நிறுவனத்தின் பங்காக மாறி விடுகிறது. அதற்கு தான் இவர்கள் கார்ப்பரேட் வருமான வரியை கட்டுக்கிறார்கள்.
Thanks for Your Comments